states

img

கீழமை நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை

லக்னோ, நவ. 29 - சம்பலில் உள்ள ஷாஹி ஜமா மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டதா, என்று உரிமையியல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. சம்பல் கீழமை நீதிமன்ற உத்தரவு தொடர்பாக ஷாஹி ஜமா மசூதிக் கமிட்டி உயர் நீதிமன்றத்தை அணுகி முறையிடலாம் என்று கூறியிருக்கும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலை மையிலான அமர்வு, மசூதி கமிட்டியின் மனுவை உயர் நீதிமன்றம் 3 நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும்; அதுவரை சம்பல் கீழமை நீதிமன்றம் ஜமா மசூதி தொ டர்பான வழக்கை விசாரிக்கக் கூடாது என்றும் உத்தரவுகளைப் பிறப்பித் துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மசூதி கமிட்டி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முறையீட்டைப் பொறுத்தவரை, அது 2025 ஜனவரி 6-ஆம் தேதிக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் உச்ச நீதி மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

கல்கி கோயிலை இடித்து மசூதியா?

உத்தரப்பிரதேச மாநிலம் சண்டௌ சியில் ஷாஹி ஜமா மசூதி உள்ளது. முகலாய பேரரசர் பாபர், 1526- இல் கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, இங்கு இந்துக் கடவுளான விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கிக்கு கோயில் இருந்ததாகவும், அதனை இடித்து விட்டுத்தான் பாபர், ஷாஹி ஜமா மசூதியைக் கட்டினார், என்று இந்துத்துவா கூட்டம் கதை கட்டியது.  இதனை விசாரிக்க வேண்டும் என்று, கடந்த நவம்பர் 19 அன்ற சம்பல் நீதி மன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தனர். அதில், மசூதிக்கு முன்பு கோயில் இருந்ததா, என்பதைக் கண்டறிய தொல்லியல் துறை ஆய்வு க்கு உத்தரவிட வேண்டும் என்று வலி யுறுத்தியது. ஆய்வில் ஆதாரம் கிடைக்கவில்லை சம்பல் நீதிபதியும் அன்றைய தினமே தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிட்டார். ஆனால், அந்த ஆய்வில், இந்துத்துவா அமைப்புக்கள் எதிர் பார்த்தபடி, கோயில் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. மசூதி கட்டப்பட்ட காலம் குறித்து தொல்லியல் துறையிடம் போதிய தக வல்கள் இல்லை. மசூதியின் கட்டுமானம் பாபர் காலத்திற்கும் முந்தையதாக உள்ளது என்று தெரியவந்தது. எனினும், நவம்பர் 24 அன்று மறு படியும் ஒரு ஆய்வுக்கு உத்தரவிடப் பட்டது. இதற்கு மசூதி கமிட்டியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

4 பேரின்  உயிரைப் பறித்த உத்தரவு

ஏற்கெனவே ஆய்வு நடந்து முடிந்து விட்ட நிலையில், மீண்டும் ஆய்வு எதற்கு, என்று கேள்வி எழுப்பிய அவர் கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தான் உ.பி. பாஜகவும், இந்துத் துவா அமைப்புக்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். முஸ்லிம்கள் கல்லெ றிவதாகவும், கலவரம் செய்வதாகவும் கூறி காவல்துறை மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், 4 பேர் கொல்லப்பட்டனர். எனினும், சம்பல் உரிமையியல் நீதிமன்றம் ஆய்வைக் கைவிடுவதாக இல்லை.  உச்ச நீதிமன்றத்தில் முறையீடு இந்நிலையிலேயே, சம்பல் நீதி மன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஷாஹி ஜமா மசூதி கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த முறையீடு, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளியன்று விசார ணைக்கு வந்தது. மசூதி கமிட்டி சார்பில் வழக்கறிஞர் அஹமதியும், உ.பி. அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜூம் ஆஜராகினர். மசூதி கமிட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஹமதி, “மசூதி கமிட்டி க்கு நோட்டீஸ் வழங்காமல், சம்பல் உரி மையியல் நீதிமன்ற நீதிபதி (ஜூனியர் பிரிவு) அவசர அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால்,  வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க முடியாது. மேலும், இந்த மசூதி 16-ஆம் நூற்றா ண்டு நினைவுச்சின்னம் மற்றும் தொல்லி யல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்” என்று குறிப்பிட்டார்.

திட்டமிட்டு வழக்குகள் தாக்கல்

கோயில்களை இடித்து மசூதிகள் கட்டப்பட்டுள்ளதாக நாடு முழுவதும் 10 வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு கள் அனைத்தும் ஒரே மாதிரியாக தொடரப்பட்டுள்ளன. நீதிமன்றங்களும் ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளன. மதுராவில் உள்ள கிருஷ்ணா ஜென்மபூமி கோவிலை ஒட்டியுள்ள ஷாஹி ஈத்கா மசூதியிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வுக்கு உத்தரவிடப் பட்டது. வாரணாசி நீதிமன்றமானது கடந்த 2022 மே மாதம் கியான்வாபி மசூதியில் ஆய்வுக்கு உத்தரவிட்டது. ஒரு வழக்கறிஞர் ஆணையர் தலை மையிலான இந்த ஆய்வில் மசூதி வளா கத்திற்குள் ஒரு சிவலிங்கம் இருப்பதா கக் கூறப்பட்டது. 1669-ஆம் ஆண்டு  பேரரசர் ஔரங்கசீப், வாரணாசி கோ யிலை இடித்துவிட்டு மசூதியை கட்டிய தாக கூறினார்கள். எனவே, மிகக் காலதாமதமாக தாக்கல் செய்யப்படும் மனுக்களின் அடிப்படையில், உள்ளூர் நீதிமன்றங்கள் மசூதிகளில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடுவதைத் தடுக்க வேண்டும். 

மதச்சார்பற்ற கட்டமைப்பை சீர்குலைக்கும்

இதுபோன்ற உத்தரவுகளை அனும திப்பது, வகுப்புவாத உணர்ச்சிகளைத் தூண்டும், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை களை உருவாக்கும் மற்றும் நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பைச் சீர் குலைத்து விடும். எனவே, சம்பல் வழக்கில் சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார். உ.பி. அரசு சார்பில் ஆஜரான சொலி சிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ், உரி மையியல் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது என்றார். அப்போது தலை யிட்ட தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, முந்தைய உத்தரவை ரத்து செய்ய உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் ஆணை 9 விதி 13-ன் கீழ் கமிட்டி மனுத் தாக்கல் செய்யலாம் என்று கூறி னார். அரசியலமைப்பின் 227-வது பிரிவின் கீழ் கீழமை நீதிமன்றங்களைக்கண்காணிக்க உயர் நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு என்றும் தெளிவுபடுத்தினார். அமைதியை ஏற்படுத்த  உ.பி. அரசுக்கு உத்தரவு ஜமா மசூதி மீதான உரிமை கோரல் விவகாரத்தைப் பொறுத்தவரை, தற்போது நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அதனை நிலுவையில் வைத்திருப்போம். ஆனால் சம்பலில் அமைதியும் நல்லிணக்கமும் பேணப் படுவதை உறுதிசெய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நாம் முற்றிலும் (நீதி மன்றம் - அரசு) நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அந்த வகையில், சம்பலில் மத நல்லிணக்கத்திற்காக மத்தியஸ்த சட்டத்தின் 43-ஆவது பிரிவின் கீழ்  சமூக மத்தியஸ்தத்திற்காக அமைதிக் குழுவை உத்தரப்பிரதேச அரசு அமைக்க வேண்டும் என்று வாய்மொழி யாக உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, மசூதியில் ஆய்வு நடத்தும் உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மசூதி கமிட்டி உயர் நீதிமன் றத்தை அணுகலாம். மசூதி கமிட்டி  தாக்கல் செய்யும் மனுவை உயர் நீதி மன்றம் 3 நாட்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அது வரை உரிமையியல் நீதிமன்றம் ஜமா மசூதி தொடர்பான வழக்கை விசா ரிக்கக் கூடாது. உரிமையியல் நீதி மன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்த ரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை உறையிலிட்டு முத்திரையிட வேண்டும். உரிமையி யல் நீதிமன்றத்தில் எந்த ஆவணங்க ளையும் தாக்கல் செய்யக் கூடாது என்றும் அடுக்கடுக்கான உத்தரவு களைப் பிறப்பித்துள்ளனர்.

ஆஜ்மீர் தர்காவுக்கும் குறிவைத்த சங் பரிவார்

உ.பி. மாநிலம் சம்பல் உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் நீதி மன்றம் புதிய பிரச்சனையைக் கிளப்பி விட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காஜா மொய்னுதீன் சிஷ்தி தர்காவானது, சங்கட் மோர்ச்சன் மஹாதேவ் எனும் சிவன் கோயிலை இடித்தே கட்டப்பட்டதாக தில்லியைச் சேர்ந்த இந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா பிரச்சனையை கிளப்பியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆஜ்மீர் சிவில் செஷன்ஸ் நீதிமன்ற மூத்த நீதிபதி மன்மோகன் சண்டேல், தர்கா நிர்வாகக் குழு, ராஜஸ்தான் மாநில சிறுபான்மைத் துறை மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.