districts

img

கீழ்வேளூர் பேரூராட்சியில் புதிய நூலகம் கட்ட நாகை மாலி எம்எல்ஏ அடிக்கல்

நாகப்பட்டினம்,டிச.12- நாகப்பட்டினம் மாவட் டம்  கீழ்வேளூர் பேரூராட்சி யில் புதிய நூலகம் கட்டுவ தற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெற்றது. நாகைமாலி எம்எல்ஏ முதற் கல்லை எடுத்துக் கொடுத்து நிகழ்வை தொடங்கி வைத்தார். கீழ்வேளூர் பேரூராட்சி யில் பல்வேறு வசதிகளு டன் கூடிய நூலகம் ஒன்று தேவை என்று பொதுமக்க ளின் சார்பில் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. சட்டமன்ற உறுப்பி னரின் கவனத்திற்கு வந்ததை அடுத்து, நூலகம் கட்டுவ தற்கான பொதுமக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு மட்டுமல்லா மல் தொடர்ச்சியான முயற்சி யில் ஈடுபட்டார். அதன் விளைவாக “உங்கள் தொகு தியில்  முதலமைச்சர் “ திட்டம் மூலமாக ஒரு கோடியே 8 லட்சம் செலவில் நூலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வில் மாவட்ட நூலக அலுவலர்  ஸான் பாஷா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். எம். அபுபக்கர், ஏ. வடிவேல், திமுக பேரூராட்சி செயலாளர் அட்சயலிங்கம்   உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.