districts

img

பாலின சமத்துவத்தை நிலைநாட்ட சமரசமின்றி போராடுவோம்! - பி.தேன்மொழி

கடலூர் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான தாக்கு தல்கள், பாலியல் வன்முறைகள் அதி கரித்து வருகிறது.  கடந்த மூன்று ஆண்டு களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு   எதிராக பெண்களை திரட்டி ஏராளமான போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி தொடர்ந்து குரல் கொடுத்து போராடுகிறது. கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சார்ந்த ஸ்ரீமதி  என்ற கள்ளக்குறிச்சியில் படித்துக் கொண்டிருந்த மாணவி    மர்மமான முறையில் இறந்தார். இம்மாணவிக்கு நீதி கேட்டு பல்வேறு கட்ட போராட்டங்களை களத்திலும், சட்ட போராட்டங்களையும் நடத்திய இயக்கம் மார்க்சிஸ்ட் கட்சி.  ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அறிவித்தபோது கடலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் மாதர் சங்கத் தலைவர்களை வீட்டுச் சிறை யில் அடைத்தனர்.  வெளியில் செல்ல விடாமல் விடிய விடிய கண்காணித்துக் கொண்டிருந்தனர். காவல்துறையின் பல்வேறு அச்சுறுத்தல் கெடுபிடிகள் மிரட்டல் அனைத்தையும் மீறி சென்னை நோக்கி வீரம் செறிந்த பயணத்தை மேற்கொண்டனர். சிதம்பரத்தில் நடராஜர் ஆலயத்தில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் நடை பெறுவதை தடுத்து நிறுத்த வேண்டும். நடை பெற்ற குழந்தை திருமணங்களை அரசு விசாரணை நடத்த வேண்டும். குழந்தை திருமணம் செய்பவர்கள் மீதும் உடந்தையாக இருப்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தொடர் இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். விருத்தாசலம் வட்டம், விருதாச்ச லம் நகரத்தைச் சேர்ந்த பெண்  ஒருவர் குடும்ப வன்முறை காரணமாக ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சி நடந்தபோது அதற்காக களத்தில் இறங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் மாதர் சங்கமே. தொடர்ந்து போராடி குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த இயக்கம்தான் செங்கொடி இயக்கம். காட்டுமன்னார்குடி மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு, கடலூர் முதுநகர் பகுதியில்  மாற்றுத்திற னாளிப்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு  உள்ளிட்ட வழக்குகளில் நீதி மன்றத்திலும் களத்திலும் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்ட இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மாவட்டத்தில் பெண்கள் சுய உதவி குழுக்களால், நுண் நிதி நிறுவனங்களால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மீட்டர் வட்டிக்கு மேல் வட்டிபோட்டு வசூல் செய்வது போன்றவைகளால்   கடுமை யாக பாதிக்கின்றனர். தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தந்த இயக்கம். பெஞ்சால் புயலால் கடலூர் நகர பகுதி யில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளானது.  உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று உடல் உழைப்பு தானம் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே. இப்படி எண்ணற்ற இயக்கங்களை நடத்தி போராடி வெற்றி கண்ட சிபிஎம் கடலூர் மாவட்டத்தில் எதிர்கால இயக்கங் களுக்கு திட்டமிட மாவட்ட மாநாட்டை நடத்துகிறது.