மதுராந்தகம், டிச.12- பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இருளர் இன பெண்ணிற்கு நீதிகிடைக்க வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து முன்னணியின் மாவட்ட தலைவர் இ.சங்கர் மாவட்டச் செயலாளர் கா.புருஷோத்தமன் ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: செங்கல்பட்டு மாவட்டம், தச்சூர் கிராமத்தை சேர்ந்த பார்வதி-சங்கர் தம்பதி ஏரி வேலை செய்து தச்சூர் ஓட்டேரி தெருவில் வசித்து வருகின்றனர். இருளர் இன வகுப்பை சார்ந்தவர்கள். இவர்க ளுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ள னர். இளைய மகள் சுகன்யா என்பவர் திம்மாவரத்தில் வசித்து வரும் நாராயணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருக்கு தற்போது 7 வயதில் மகள் உள்ளார். சுகன்யா விற்கு உடல்நலம் சரியில்லாததால் அவரை தாய் பார்வதி வீட்டில் வைத்து செங்கல்பட்டு மருத்துவ மனையில் மருத்துவம் பார்த்து வரு கின்றனர். இந்நிலையில் நட்பாக பழகிவந்த அந்தோணி (70) என்பவர் வீட்டிற்கு வந்து சுகன்யாவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சுகன்யாவின் தாயார் பார்வதி அணைக்கட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை யினர் அந்தோணியை கைது செய்து பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள இளம் பெண்ணுக்கு உரிய நீதியும் நிவாரணமும் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.