திருவண்ணாமலை, டிச.12- குளம், ஏரி, அணைகளின் குத்தகைகளை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அமல்படுத்தாமல், 17 மாதங்களாக மீனவர்களை அலைக்கழிக்கும் அரசு நிர்வாகத்தை கண்டித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) சார்பில் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.அறிவழகன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எஸ். சதீஷ், சிஐடியு மாவட்ட தலைவர் காங்கேயன், மாவட்டச் செயலாளர் இரா. பாரி, மாவட்ட துணை தலைவர் பி. கணபதி, விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் ஏ. லட்சுமணன், மீன்பிடி சங்க கவுரவ தலைவர் ஆர். ரவி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம் .பிரகாஷ், சி பி எம் நகர செயலாளர் எம். சரவணன், மீன்பிடி சங்க துணை தலைவர் எம். கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.