districts

திருச்சி முக்கிய செய்திகள்

பேராவூரணி பகுதியில்  சாலை மேம்பாட்டுப்  பணிகள் ஆய்வு 

தஞ்சாவூர், நவ.2 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும்  சாலை மேம்பாட்டுப் பணிகளை திருச்சி நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.  தஞ்சாவூர் கோட்டம், பேராவூரணி நெடுஞ்சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் பரப்பு அடிப்படையிலான பராமரிப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தின்கீழ் அகலப்படுத்தும், மேம்படுத்துதல் திட்டம் மற்றும் சிஆர்ஐடிபி திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதி களில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது கோட்டப் பொறியாளர் செந்தில் குமார், உதவி கோட்டப் பொறியாளர் விஜயகுமார், உதவி  பொறியாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் உடனிருந்தனர். 

சீருடை வழங்கல்

பாபநாசம், நவ.2 -  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் பணி யாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும்  நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் பேரூராட்சி செயல் அலு வலர் ரவிஷங்கர், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி  ராஜா முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் பாபநாசம் பேரூ ராட்சித் தலைவர் பூங்குழலி, தூய்மை பணியாளர்கள் 75 பேருக்கு சீருடைகளை வழங்கினார். இதில் பாபநாசம்  பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட பேரூராட்சி ஊழி யர்கள் கலந்துக் கொண்டனர். 

வடமாநிலத்தைச் சேர்ந்த தாய்-குழந்தை தஞ்சை காப்பகத்தில் ஒப்படைப்பு

பாபநாசம், நவ.2 - பாபநாசம் ரயில் நிலையத்தில் தனியாக இருந்த வடமாநிலப் பெண்ணும், அவரது 6 மாத குழந்தையும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் 30  வயதான பெண், அவரது 6 மாத பெண் குழந்தை தீபாவளி  முதல் நாளில் (அக்.30) இருந்து ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்ததை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர்.   இதுகுறித்து, பாபநாசம் ரயில் நிலைய வணிக கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்த லின் பேரில், சம்பவ இடத்திற்கு தஞ்சாவூர் குழந்தைகள்  காப்பகம் மற்றும் பாதுகாப்பகத்தின் (1098) மேற்பார்வை யாளர் அஜித்தா, கும்பகோணம் இருப்புப் பாதை காவல்  நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், தலைமை காவலர் சதீஷ்குமார், கும்பகோணம் ரயில்வே பாதுகாப்பு  படை தலைமை காவலர் இளையராஜா ஆகியோர் அங்கு  வந்தனர்.  பின்னர், ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தாய் முன்னி, அவரது 6 மாத பெண்  குழந்தையை மீட்டு தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவ மனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்து, அதன்பின் தஞ்சாவூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

பூச்சந்தை சுப்பிரமணிய சுவாமி கோயிலில்  கந்த சஷ்டி விழா தொடக்கம்

தஞ்சாவூர், நவ.2-  தஞ்சாவூர் பூச்சந்தை சுப்பிரமணிய சுவாமி கோயி லில் கந்த சஷ்டி விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் உள்ள பூச்சந்தை அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. பழமை யான இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சூரசம்ஹாரம்  நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை  உள்ளடக்கிய கந்த சஷ்டி விழா சனிக்கிழமை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.  தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (நவ.3) மான் வாக னத்திலும், திங்களன்று பூத வாகனத்திலும், நவ.5-இல்  யானை வாகனத்திலும் சுப்பிரமணியசுவாமி வீதியுலா நடைபெறவுள்ளது. நவ.6 அன்று ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி வீதியுலா நடை பெறவுள்ளது. முக்கிய நிகழ்வான நவ.7 அன்று இரவு 7  மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவ.8  அன்று திருக்கல்யாணமும், நவ.9 அன்று குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும், நவ.10 அன்று திருத்தே ரும், நவ.11 அன்று தீர்த்தவாரியும், நவ.12 ஆம் தேதி விடை யாற்றியும் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை உபயதாரர்களுடன் இணைந்து இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து  வருகின்றனர்.

நவ.5 விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

தஞ்சாவூர், நவ.2 -  தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவ.5 (செவ்வாய்கிழமை) அன்று காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற  உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும், இக்கூட்டத்தில் கலந்து  கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும்  வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியி யல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு, நீர்ப்பாச னம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி கள் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி  வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று,  பின் மனுக்களை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா  பங்கஜம் தெரிவித்துள்ளார்.

சமத்துவபுர வீடுகளுக்கு தகுதியான  வீடற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி, நவ.2 - திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், தளுகை ஊராட்சி, த.மங்கம்பட்டிபுதூரில் பெரியார் நினைவு சமத்து வபுரம் திட்டத்தின்கீழ் புதிதாக அமையவுள்ள 100 (நூறு மட்டும்) சமத்துவ புர வீடுகளுக்கு தளுகை ஊராட்சியிலிருந்து தகுதியான வீடற்ற பயனாளி களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மேற்படி திட்டத்தில் பயனடைய விரும்பும் வீடற்ற தகுதியுள்ள பயனாளி கள் இசைவு கடிதத்துடன் ஆதார் அட்டை, சாதிச்சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ)-க்கு 29.11.2024 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களை குடும்ப தலைவியாக கொண்ட குடும்பங் கள், முன்னாள் இராணுவத்தினர், ஓய்வு பெற்ற துணை இராணுவ உறுப்பினர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் உள்ள குடும்பங் கள், திருநங்கைகள், எச்ஐவி, எய்ட்ஸ் போன்ற நோய்கள் சம்பந்தப்பட்ட துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) சான்றளிக்கப்பட்ட நபர்கள், மனரீதி யாக பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள குடும்பங்கள் மற்றும் தீ, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர், ஏழை மக்கள் பங்கேற்பு டன் கூடிய ஏழைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பட்டியலில் இடம்பெற்று உள்ள மிகவும் ஏழைகள் மற்றும் ஏழைகள் ஆகிய நலிவுற்ற குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

நெல் சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

பாபநாசம், நவ.2 - தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுஜாதா விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “நடப்பு சம்பா,  தாளடி பருவத்தில் நெல் நடவு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மிகுந்த அளவில் பெய்யக்கூடும் என  வானிலை முன்னறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.  எனவே, நெல் சாகுபடி விவசாயிகள் அனைவரும் பருவ மழைக்கால பாதிப்புகள், பூச்சி, நோய் தாக்குதல் போன்றவற்றில் இருந்து காத்துக் கொள்ளும் விதமாக தங்கள் நெற்பயிரை பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். ஏக்கர் ஒன்றிற்கு ரூ.548 பிரீமியமாக செலுத்தி  ரூ.36,500-க்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.  மழை மற்றும் தண்ணீர் தேங்குதல் ஆகிய காரணிகள் தவிர ஏனைய காரணிகளால் பாதிக்கப்படும் தனிநபர் விவ சாயிகளுக்கு உரிய பாதுகாப்பு இவ்வாண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தில் இணையும் அனைத்து விவசாயிகளுக்கும் ‘உங்கள் பாலிசி உங்கள் கையில்’ என்ற இலக்கின்படி அவரவர் முகவரிக்கு காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தி யமைக்கான ரசீது விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். எனவே பயிர் காப்பீடு செய்து கொள்வதை ஒரு  செலவாக நினைக்காமல், தங்களுக்கு செய்து கொள்ளும்  தற்காப்பு நடவடிக்கையாக எண்ணி, அனைத்து நெல் சாகுபடி விவசாயிகளும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

கல்லறை திருநாள் கடைப்பிடிப்பு: தஞ்சையில் கிறிஸ்தவர்கள் வழிபாடு

தஞ்சாவூர், நவ.2 -  தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் சனிக்கிழமை கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்லறைகளுக்கு சென்று  தங்களின் முன்னோர்களுக்காக பிரார்த்தனை செய்தனர். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவ.2 ஆம் தேதி  கல்லறை திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி  தஞ்சாவூரில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களி லும் சனிக்கிழமை கல்லறை திருநாள் கடைபிடிக்கப் பட்டது. இதையொட்டி கல்லறைகள் சுத்தம் செய்யப்பட்டு,  வர்ணம் பூசப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தஞ்சாவூர் பூக்காரத்தெரு திரு இருதய பேரால யத்தில் கல்லறைத் திருநாள் சிறப்பு வழிபாடு மறை மாவட்ட ஆயர் டி.சகாயராஜ் தலைமையில் நடைபெற்றது.  அப்போது இறந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரா லயத்தினுள் அடக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் ஆயர்கள் ஆர்.ஏ.சுந்தரம், பாக்கியம் ஆரோக்கியசாமி, எம்.தேவதாஸ் அம்புரோஸ் ஆகியோர் கல்லறைகளை ஆயர் ஜெபித்து புனிதம் செய்தார். இந்த வழிபாட்டில் பேராலயத்தின் பங்குத் தந்தை ஏ.எம்.ஏ.பிரபாகர் அடிகளார், உதவிப்பங்கு தந்தை அமர்தீப்  மைக்கேல், ஆயரின் செயலர் ஆரோக்கிய வினிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திரு இருதய ஆண்டவர் கல்லறை, வியாகு லமாதா கல்லறை, சூசையப்பர் கல்லறை, மிக்கேல் சம்மனசு கல்லறை, ஆரோக்கியம் செபஸ்தியம்மாள் கல்லறைகளில் திருப்பலியும், கல்லறைகள் புனிதம் செய்யும் சடங்கும் நடைபெற்றது. இறைமக்கள் காலை  முதல் வெளியூரிலிருந்தும், தஞ்சாவூரின் பல பகுதிகளி லிருந்தும் குடும்பமாக வந்து தங்கள் முன்னோர்கள் கல்லறைகளில் மலர்கள் வைத்தும், மெழுகு திரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் பூண்டி மாதா கோயில், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு, பேராவூரணி ஆகிய இடங்களில் உள்ள கல்லறைகளிலும் கிறிஸ்தவர்கள் சனிக் கிழமை கல்லறை திருநாளை கடைப்பிடித்தனர்.

வீட்டில் இருந்த வெடிகள்  வெடித்து தீ விபத்து

 நத்தம், நவ.2- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). தீபாவளியை முன்னிட்டு இவர் வெடிகள் வாங்கி வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்துள்ளார். இந்த வெடிகளை எடுத்து அவரது மகன்கள்  வெடித்து வந்தனர். இந்நிலையில் வெடிகள் வைத்துள்ள  அறையில் ஊதுபத்தியை அணைக்காமல் வைத்து விட்டு  சென்று விட்டனர். இதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு வீட்டில் இருந்த வெடிகள் முற்றிலுமாக தீ பிடித்து எரிய  தொடங்கியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் அரைமணி நேர  போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இருப்பி னும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் கருகி சேதமாகி யது.  இதைப்போலவே ஏரக்காபட்டியில் நாகராஜ் என்ப வரின் கூரை வீட்டில் வெடி வெடித்து கூரையின் மேல்புறம்  தீ பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை யினர் தீயை அணைத்தனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு  சிறப்பு பேருந்துகள்

தூத்துக்குடி, நவ. 2 சூரசம்ஹாரத்தையொட்டி சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு 6ஆம் தேதி சிறப்பு பேருந்து கள் இயக்கப்படுகிறது. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதா வது: சூரசம்ஹாரத்தையொட்டி வருகிற 6 ஆம் தேதி  சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந் தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி 6 ஆம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 7ஆம்  தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம்,  கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கின்றன. www.tnstc.in மற்றும் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியர்கள் டிஜிட்டல் சான்றிதழ்  சமர்ப்பிக்க அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

தூத்துக்குடி, நவ. 2 மத்திய மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 1ம்  தேதி முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச்  சமர்ப்பிக்கும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால் காரர்கள் மூலம் சமர்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்று உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதா ரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக,  அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் “இந்தியா  போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி”. ஓய்வூதியதா ரர்கள் வீட்டிலிருந்த படியே தபால்காரர்கள் மூலம் பயோமெட்ரிக் அல்லது FACE RD App  முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ்  சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்கா ரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதா ரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண். PPO எண் மற்றும் ஓய்வூ திய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல்ரேகை பதிவு செய்தால், ஒரு சில  நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றி தழை சமர்ப்பிக்க முடியும். இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள  அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால் காரரை தொடர்பு கொள்ளலாம். மேலும் https:// ccc. cept.gov.in/ServiceRequest/ request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது “Postinfo” செயலியை பதிவிறக்கம் செய்து  ஓய்வூதியதாரர்கள் தங்களின் சேவை கோரிக்கையை ஆன்லைனில் பதிவு செய்ய லாம். அந்தந்த பகுதி தபால்காரர்கள் மூலம் வீட்டிற்கே வந்து சேவை வழங்கப்படும். இந்த  சேவையை வழங்க அனைத்து அஞ்சல கங்களிலும் நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல்  சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  மேலும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சிறப்பு முகாம் நவம்பர் 4ம்  தேதி ஏரல், நவம்பர் 8ஆம் தேதி புதுக்கோட்டை,  நவம்பர் 16ஆம் தேதி ஒட்டப்பிடாரம், நவம்பர்  25ஆம் தேதி ஆத்தூர் ஆகிய அஞ்சல கங்களில் நடைபெற உள்ளது. ஓய்வூதிய தாரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி  டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்பிக்க தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முது நிலை கண்காணிப்பாளர்சுரேஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கணவர் தாக்கியதில் பல்செட்’ தொண்டையில் சிக்கி மனைவி மரணம்  போலீஸ் விசாரணை

 தென்காசி, நவ.2- தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் திருமலைச்சாமி (வயது  42), கூலித் தொழிலாளி  யான இவர் தன்னுடைய மாமா  மகளான  சசிகலாவை (34) திருமணம் செய்து  கொண்டார். இவர்களுக்கு  பிரித்திஷா (9) என்ற மகள் உள்ளார். கணவன்- மனைவி - இடையே அடிக்கடி  குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படு கிறது.  தீபாவளி பண்டிகையையொட்டி சசி கலாவின் தாயாரான வால்பாறை எஸ்டேட்  பகுதியைச் சேர்ந்த பார்வதி, தனது மகளைப்  பார்ப்பதற்காக வந்தார். அப்போது மதியம் திருமலைச்சாமிக்கும், சசிகலாவுக்கும் இடையே  தகராறு ஏற்பட்டது. ஆத்திர மடைந்த திருமலைச்சாமி, பாத்திரம் கழுவ  அமரும் சிறிய மரப்பலகையை எடுத்து மனைவி சசிகலாவின் முகத்தில் தாக்கிய தாக கூறப்படுகிறது. இதில் சசிகலாவின் வாயில் பொருத்தப்பட்டு இருந்த ‘பல் செட்’  கழன்று அவரது தொண்டையில் சிக்கியது.  மயங்கி விழுந்து உயி ருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு ‘ கொண்டு சென்றனர்.  அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திரு நெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சசிகலா பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்து தாயா பார்வதி அளித்த  புகாரின்  பேரில், மருமகன் திருமலைச்சாமி மீது வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மணிமுத்தாறு அருவியில்  சுற்றுலா பயணிகள் குளிக்க தடை: வனத்துறை அறிவிப்பு

திருநெல்வேலி, நவ .2- நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.  மேற்கு தொடர்ச்சி மலைப்  பகுதியில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணி முத்தாறு அருவியில் குளிக்க தடை விதித்துள்ளனர். இது தொடர்பாக வனத் துறை யினர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:- களக்காடு முண்டந்துறை  புலிகள் காப்பகம், அம்பா சமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சர கத்திற்கு உட்பட்ட பகுதி யில் கனமழை எச்சரி க்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மணிமுத்தாறு அருவி பகுதியில் பெய்த மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவிற்கு வரும் பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு மட்டும் தடை  விதிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

24.56 மில்லியன் டன் சரக்குகளை  கையாண்டு வ.உ.சி. துறைமுகம் சாதனை

தூத்துக்குடி, நவ. 2 தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சரக்குகள் கொண்டு வரப்பட்டு இறக்குமதி செய்யப் படுகின்றன. அதேபோன்று பல்வே நாடு களுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டு வரு கிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஆஸ்தி ரேலியா நாட்டில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு புளு அலெக்சாண்ட்ரா என்ற கப்பல் மூலம் 22 ஆயிரத்து 809 டன் ராக்பாஸ்பேட் கொண்டு வரப்பட்டது. ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, இஸ்ரேல், லெபனான், டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரு கிறது. தற்போது முதல் முறையாக ஆஸ்திரே லியாவில் இருந்து ராக்பாஸ்பேட் தூத்துக் குடி வ.உ.சி. துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். மேலும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நடப்பு நிதியாண்டில் வியாழக்கிழமை வரை 24.56 மில்லியன் டன் சரக்குகளையும், 4  லட்சத்து 64 ஆயிரத்து 60 சரக்கு பெட்டகங்களை யும் கையாண்டு சாதனை படைத்து உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 23.71 மில்லியன் டன் சரக்குகளையும், 4  லட்சத்து 36 ஆயிரத்து 761 சரக்கு பெட்டகங் களையும் கையாண்டு இருந்தது. தற்போது சரக்கு கையாளுவதில் 3.61 சதவீதம் வளர்ச்சி யும், சரக்கு பெட்டகங்கள் கையாளுவதில் 6.25 சதவீதம் வளர்ச்சியும் பெற்று சாதனை படைத்து உள்ளது என்று அதிகாரிகள் தெரி வித்து உள்ளனர்.