districts

திருச்சி முக்கிய செய்திகள்

பெரியார் சிலைக்கு மரியாதை

அரியலூர், டிச.25 - தந்தை பெரியாரின் 51  ஆவது நினைவு தினத்தை யொட்டி, ஜெயங்கொண் டம் திருச்சி சாலையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மாதர்  சங்கம் சார்பில், கட்சியின்  மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா தலை மையில் மாதர் சங்கத்தி னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டத் தலைவர் பத்மாவதி, மாவட்டச் செயலாளர் அம்பிகா, பொ ருளாளர் மலர்க்கொடி மற்றும் மாவட்டக் குழு  உறுப்பினர்கள், ஒன்றியச்  செயலாளர்கள் பங்கேற்றனர்.

கோமாரி தடுப்பூசி முகாம்

பொன்னமராவதி, டிச.25 - மழைக் காலம் என்பதால் கால்நடை பரா மரிப்புத் துறையின்  சார்பில் கால்நடை களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டுள்ளது.  இதையடுத்து, புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள க.புதுப்பட்டியில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது. ஆலவயல் கால்நடை மருத்துவமனை மருத்து வர் ராஜசேகர் தலைமை யில் கால்நடை ஆய்வா ளர் செபஸ்டியம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சாந்தி ஆகி யோரைக் கொண்ட மருத்துவக் குழுவினர் மாடுகளுக்கு கோமாரி  தடுப்பூசி செலுத்தினர். ஊராட்சித் தலைவர் செல்வி மற்றும் உள் ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி  

தஞ்சாவூர், டிச.25 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி  இயக்குநர் (பொ)  ச.சன்மதி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், தஞ்சை மாவட்ட ஆட்சி யர் உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை வட்டார  வேளாண்மை துறையின்  சார்பில், தாமரங் கோட்டை வடக்கு, பள்ளி கொண்டான், மழவேனிற் காடு, கொண்டிகுளம், ஏனாதி ஆகிய கிராமங்க ளில் நெல் சாகுபடி தொ ழில் நுட்பங்கள் குறித்த  பயிற்சி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது.  தாமரங்கோட்டை வடக்கு கிராமத்தில் நடை பெற்ற பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ச.மாலதி, விவசா யிகளுக்கு தொழில்நுட்ப கருத்துகளை எடுத்துக் கூறினார். பயிற்சியில் கலந்து கொண்ட வேளாண்மை உதவி அலுவலர்கள் இலை வண்ண அட்டை கொண் டும், நெல் சாகுபடி குறித்த துண்டு பிர சுரங்களை கொண்டும், நெற்பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்தும் விவ சாயிகளிடம் கூறினார்.

லஞ்சம் பெற்ற இருவருக்கு  4 ஆண்டுகள் சிறை

அரியலூர், டிச.25 - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒன்றிய பணி மேற்பார்வையாளராக பணி புரிந்தவர் சங்கர். இவர், அப்போது நாகம்பந்தல் கிராமத்தில்  முழு சுகாதார திட்டத்தின்கீழ் ராதாகிருஷ்ணன், திரிசங்கு ஆகி யோர் கட்டிய கழிவறைக்கு அரசு வழங்கும் தொகை ரூ.12,000  வழங்க, லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத  ராதாகிருஷ்ணன் மற்றும் திரிசங்கு, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி தலா ரூ.1,500 வீதம் ரூ.3,000  தொகையை அங்கு பணிபுரிந்த தற்காலிக பணியாளர் ரத்தின  சிகாமணியிடம் வழங்கினர். அப்போது மறைந்திருந்த லஞ்ச  ஒழிப்பு போலீசார், சங்கர் மற்றும் ரத்தின சிகாமணி ஆகி யோரை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மணி மேகலை, லஞ்சம் பெற்ற சங்கர் மற்றும் ரத்தின சிகாமணி  ஆகிய இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை யும், அதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.  இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

நீர்வரத்து வாரியை ஆட்சியர் ஆய்வு

அறந்தாங்கி, டிச.25 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம்  நற்பவளக்குடி ஊராட்சி செங்கமாரி, கோவில்கோட்டை, பெரியகுளம் நீர்வரத்து வாரி மற்றும் அறந்தாங்கி வட்டம் அழியாநிலை வருவாய் கிராமத்தில் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் வசித்து வரும் குடும்பத்தினருக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி ஆகிய வற்றை மாவட்ட ஆட்சியர் மு.அருணா நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நளினி, குமாரவேலன், வட்டாட்சியர் திருநாவுக்கரசு, நற்பவளகுடி ஊராட்சி மன்றத் தலைவர் மணி  மொழியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

பிற மாவட்ட விசைப் படகுகளால்  நாட்டுப்படகு மீனவர்கள் பாதிப்பு

தஞ்சாவூர், டிச.25  -  தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில், மீன்வளத் துறை ஆய்வாளரைச் சந்தித்து காரைக்கால், நாகப்பட்டினம் விசைப்படகு மீனவர்களால் பாதிக்கப்பட்ட, ஏராளமான உள்ளூர் நாட்டுப்படகு மீனவர்கள் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.  காரைக்கால், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள், அரசின் விதியை மீறி சட்டவிரோதமாக பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடிவலைகளைக் கொண்டு, தொடர்ச்சியாக 24 மணி நேரமும் மீன்பிடித்  தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.  மேலும், அதிக குதிரைத் திறன்மிக்க விசைப் படகுகளைக் கொண்டு, மல்லிப்பட்டினம் பகுதி நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்துவதாகவும், இரட்டை மடி வலை பயன்படுத்தி மீன் குஞ்சுகள் வரை பிடித்து செல்வதால் மீன் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு, அவர்களுடைய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளும், வெளி மாவட்ட விசைப்படகுகளால் சேதமடைகின்றன. இதனைக் கண்டித்து (டிச.23) திங்கள்கிழமை தர்ணா போராட்டம் நடத்தப்படும் என நாட்டுப்படகு மீனவர்கள் அறிவித்திருந்த நிலையில், அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு பாதிக்கப்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள், மீன்வளத்துறை ஆய்வாளர் வீரமணியைச் சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

வனத்துறை பாதிக்கப்பட்ட மக்களுடன் விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சந்திப்பு

பொன்னமராவதி, டிச.25 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி - ஆலவயல் அருகே உள்ள சொக்கநாதப்பட்டியில் வனத்துறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் குறைகள் குறித்து கேட்டறிந்தனர்.  சங்கத்தின் பொறுப்பாளர் நல்லதம்பி தலைமையில், ஒன்றியச் செயலாளர் பி.ராமசாமி, ஒன்றியத் தலைவர் கே.ஆர். பழனியப்பன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் பாண்டியன் ஆகியோர்  வனத்துறையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.  அவர்களிடம் பேசிய ஊர் சின்ன அம்பலம் தர்மலிங்கம், கிருஷ்ணன் உள்ளிட்டோர், “கிராமத்தில் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மலையடி அய்யனார் கோவில் வழிபாடு உள்ளிட்ட விஷயங்களில் வனத்துறை கடுமையாக நடந்து கொள்வதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் சிரமங்களை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட - மாநில நிர்வாகிகளை அழைத்து வந்து, இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க உதவுவதாக சங்கத்தினர் தெரிவித்தனர்.

மழை, வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் மல்லிப்பட்டினம் கிராமத்தில் எம்எல்ஏ ஆய்வு

தஞ்சாவூர், டிச.25 - மழை, வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் மல்லிப்பட்டினம் கிராமத்தில், பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் புதன்கிழமை ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், சரபேந்திர ராஜன் பட்டினம் ஊராட்சி, மல்லிப்பட்டினம் கடற்கரை கிராமத்தில் உரிய வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது.  அண்மையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த ஃபெஞ்சால் புயலையொட்டியும், அதனைத் தொடர்ந்து பெய்த மழையிலும் மல்லிப்பட்டினம் பகுதியில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதுகுறித்து தகவலறிந்த பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் தனது சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் ஏற்பாடு செய்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். அதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை மீண்டும் மல்லிப்பட்டினம் சென்று வீரர் முகமது அலி தெரு, பள்ளிவாசல் தெரு, காயிதே மில்லத் நகர் ஆகிய இடங்களில் எம்எல்ஏ நா.அசோக்குமார் பார்வையிட்டு, வடிகால் வசதியுடன் புதிய சாலை அமைக்கவும், காயிதே மில்லத் நகரில் புதிய சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.  மேலும், சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை சரிசெய்யுமாறு மின்வாரிய அலுவலர்களிடம் தெரிவித்தார். மல்லிப்பட்டினம் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தார்.

சேது சாலை காவல் கண்காணிப்பறை  செயல்பாட்டுக்கு வருமா?

தஞ்சாவூர், டிச.25 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அண்ணா சிலை அருகில் பல ஆண்டுகளாக காவல்துறை கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது. இந்தப் பகுதியில் காலை, மாலை நேரங்களில் வாகனப் போக்குவரத்து அதிகம் இருப்பதால் அதை ஒழுங்கு படுத்துவதற்காக காவலர்கள் பணியில் இருந்து வந்தனர். ஆனால் சில ஆண்டுகளாக கண்காணிப்பு அறைக்கு காவலர்கள் எவரும் வருவதில்லை. இதனால் இந்த கண்காணிப்பு அறை பயனற்று உள்ளது. மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் இந்த அறையை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர். கண்காணிப்பு அறையின் வெளிப்புறத்தில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவதும், கண்ணீர் அஞ்சலி பிளக்ஸ் போர்டு வைப்பதும் தொடர்கிறது. இப்பகுதியில் (பேரி கார்டு) கம்பித் தடுப்புகள் இல்லாததால் சாலை விதிகளை மீறி குறுக்கும் நெடுக்குமாக வாகனங்கள் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, பயனற்று இருக்கும் இந்த காவல்துறை கண்காணிப்பு அறையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, விபத்தில்லாமல் போக்குவரத்து நடைபெற, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஏ.எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.