மயிலாடுதுறை,டிச.12- மயிலாடுதுறையில் அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்/ உடன் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் , மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி , மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.