மாதர் சங்க புதிய கிளை துவக்கம்
கும்பகோணம், டிச.12- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடை மருதூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குடமங்களம் கிராமத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் புதிய சங்க கிளை அமைக்கப்பட்டது மாவட்ட பொறுப்பாளர் அறிவு ராணி பேசினார். சங்க கிளைத் தலைவராக மகேஸ்வரி, செயலாளராக வசந்தி, பொருளாளராக புவனேஸ்வரி, துணைத்தலைவராக மாரி யம்மாள், துணைச் செயலாளராக பானுமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இளந்துறை கிராமத்தில் மதுபோதைக்காரர்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், இடையூறு ஏற்படுகிறது.இதனால் இங்கு இயங்கி வரும் அரசு மதுபான கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கிராமத்தில் உள்ள அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மணல் கடத்திய 2 பேர் கைது
திருச்சிராப்பள்ளி, டிச.12- ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ரோடு பகுதியில் ஸ்ரீரங்கம் காவல் சார்பு ஆய்வாளர் தீபிகா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை வழிமறித்து சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக திருவளர்ச்சோலையைச் சேர்ந்த விஜய பாரதி ,விஜயபாஸ்கர் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். ரமணா என்பவரை தேடி வருகின்றனர்.
லாட்டரி விற்ற 6 பேர் கைது
திருச்சிராப்பள்ளி, டிச,12- திருச்சி காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் அர சால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து காந்தி மார்க்கெட், பாலக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட போலீசார் அந்தந்த பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் லாட்டரி விற்ற ஆறு பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் விடியவிடிய மழை
மக்களின் இயல்பு வாழ்க்கை, பாதிப்பு
திருச்சிராப்பள்ளி, டிச,12- தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை யால் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.குறிப் பாக திருச்சி மாவட்டத்தில் புதனன்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. சில இடங்களில் கன மழையும் பல இடங்களில் மிதமான மழையும் பெய் தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவி கள் மழையில் நனைந்தும் குடை பிடித்தும் சென்றனர். மாவட்டத்தில் அதிகபட்ச மாக கள்ளக்குடியில் 45.2 மில்லி மீட்டர் மழை பதி வானது. மாவட்டத்தின் இதர பகுதிகளான லால்குடி 8 ,நந்தியாறு அணைக்கட்டு 37.4, புள்ளம்பாடி 42 ,தேவி மங்கலம் 19.8, சமயபுரம் 22.4, சிறுகுடி 20.2, வாத்த லை அணைக்கட்டு 18 ,மணப் பாறை 13.4 ,பொன்னணி ஆறு அணை 13, கோவில் பட்டி 17.2 ,மருங்காபுரி 4.2, முசிறி 2 ,புலிவலம் 5, தா. பேட்டை 5, நவலூர் கொட்டப் பட்டு 16, துவாக்குடி 24, கொப்பம்பட்டி 3 ,தென்பர நாடு 10, துறையூர் 10, பொன் மலை 15, திருச்சி ஏர்போர்ட் 24.4, திருச்சி ஜங்ஷன் 26.6, திருச்சி டவுன் 18 என மழை அளவு பதிவானது. மாவட்டம் முழுவதும் 419. 8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதன் சராசரி மழை அளவு 17.49 ஆகும். இடைவிடாது பெய்து வரும் தொடர் மழையால் திருச்சி மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இது மட்டு மன்றி வியாபாரம் பாதிக்கப் பட்டது. பெரும்பாலான தரைக் கடை வியாபாரிகளும் இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் புதனன்று இரவு தொடங்கிய மழை காலை, மாலையிலும் தொடர்ச்சியாக பெய்தது. தமிழகத்தில், 21 மாவட் டங்களில் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலை யிலும், திருச்சி மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்பட வில்லை. குறிப்பாக, ‘ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகள் பயிலக்கூடிய தொடக்கப் பள்ளிகளுக்கா வது விடுமுறை அளிக்க வேண்டும்’ என்ற கோ ரிக்கை பெற்றோர் தரப்பில் எழுந்தது. ஆனாலும், ‘திருச்சி மாவட்டத்தில் வியாழனன்று காலை வரை, 1.67 சென்டி மீட்டர் மட்டுமே மழை பெய்து இருக்கிறது. 10 மணிக்கு மேல் மழை படிப்படி யாக குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை இல்லை’ என்று ஆட்சி யர் தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கொட்டும் மழையில் மாணவ, மாணவி கள் குடை பிடித்தபடியும், ரெயின்கோட் அணிந்தபடி யும், சிலர் மழையில் நனைந்த படியும் பள்ளிகளுக்கு சென்றனர். குறிப்பாக, அரையா ண்டு தேர்வு நடைபெறும் நிலையில் மாணவ, மாண விகள் மழை காரணமாக கடும் சிரமத்துக்கு இடையே பள்ளிகளுக்கு சென்றுள்ள னர். ‘மழையின் போது சம் பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களே விடுமுறை குறித்து முடிவெடுக்கலாம்’ என்ற அரசின் உத்தரவு இருந்தபோதிலும், மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து எவ்வித உறுதியான தக வலும் வழங்கப்படவில்லை. இதனால், பள்ளி மாணவ, மாணவிகளும், அவர்களின் பெற்றோர்க ளும் கடும் அவதிக்கு உள்ளா யினர். இந்நிலையில் திருச்சி யில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கள் தனியார் பள்ளிகள் ஆகி யவற்றில் 80 விழுக்காடு மாணவர்கள் வருகை இருந்தது.
ஆசிரியையை கொன்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தஞ்சாவூர், டிச.12 - பேராவூரணி அருகே ஆசிரியை கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண் மைக்குழு சார்பாக தற்காலிக ஆசிரியை யாக பணியாற்றி வந்த ரமணி (26) என்பவரை மதன்குமார் (28) என்பவர் நவம்பர் 20 ஆம் தேதியன்று கத்தியால் குத்திக் கொலை செய்தார். கொலையாளி மதன்குமார் உடனடியாக கைது செய்யப் பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் அ.துரைராஜ் தாக்கல் செய்த ஆணையுறுதி ஆவ ணத்தை ஏற்றும், மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரிலும், பட்டுக்கோட்டை வட்டம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, சின்ன மனை கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல் வம் மகன் மதன்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.