மயிலாடுதுறை, ஜன.30 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூ ரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயம் 25 ஆண்டுகளுக்கு பிறகு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிற நிலை யில் மார்ச் 27 அன்று கும்பாபிஷேக விழா நடை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆல யத்தின் கும்பாபிஷேகம் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாகவும் அதன் பின்னர் கடந்த ஒரு ஆண்டுகளாக கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து திருக்கடையூரில் கும்பாபிஷேக பணிகள் குறித்து ஆய்வு செய்த 27 ஆவது தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னி தானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த னர். அப்போது, 2022 மார்ச் 27 ஆம் தேதி, காலை 10 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் பக்தர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றியே திர ளாக பங்கேற்க வேண்டும் என்றார். பேட்டியின் போது காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் 233 ஆவது குருமகா சன்னி தானம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.