நிதி தலைவர் கல்யாணசுந்தரம் பேட்டி கும்பகோணம், செப்.30- கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிட மாக கொண்டு செயல்பட்டு வரு கிறது. நிதியின் பங்குதாரர்களின் 120 ஆவது பேரவை கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்ப கோணம் பரஸ்பர சகாய நிதி லிமி டெட் தலைவரும், மாநிலங்க ளவை உறுப்பினருமான கல்யாண சுந்தரம் வரவேற்று நிதியின் செயல் பாடுகள் மற்றும் வணிக வளர்ச்சி குறித்து பேசினார். அப்போது அவர் தெரிவிக்கை யில், “நிதி நிறுவனத்தின் வர லாற்றில் இல்லாத அளவில் தமிழ கமெங்கும் 125 கிளைகளுடன் செயல்பட்டு வரும் முன்னோடி நிறு வனமான கும்பகோணம் பரஸ்பர சகாயநிதி லிமிடெட், இந்திய அளவில் நிதி நிறுவன வரிசையில் என்டிஎச்-4 அந்தஸ்து பெற்ற முதல் நிறுவனமாக திகழ்கிறது. கடந்த 2023-24 ஆம் ஆண்டில் தங்கத்தின் சந்தை விலைக்கேற்ப நிதியை எந்த விதத்திலும் பாதிக் காத வகையில், சிறப்பான நிதி மேலாண்மை காரணமாக நிதி நிறு வனம் நகைக்கடன் வணிகத்தில் மிக பாதுகாப்பான நிலையை எட்டி உள்ளது. கடந்த வருடம் வைப்பு நிதியான ரூ.3500 கோடியிலிருந்து, 311 கோடி உயர்ந்து தற்போது ரூ.3,811 கோடியாக அதிகரித்து உள்ளது. அதேபோல் கடந்த ஆண்டைவிட 376 கோடி உயர்ந்து, ரூ.3540 கோடி நகை கடன் வழங்கி யுள்ளது. சென்ற ஆண்டு ரூ.101.84 கோடியில் இருந்த நிகர லாபம் 2023- 24-இல் ரூ.1.85 கோடி அதிகரித்து பங்குதாரர்கள் ஒத்துழைப்போடு ரூ.103.69 கோடியாக உயர்ந்து உள்ளது. அதேபோல் காப்பு பண இருப்பு ரிசர்வ்ட் ஃபண்ட் 2023- 24 வரவு-செலவு வளர்ச்சி விகி தங்களை நன்கு கவனித்ததால் இந்த ஆண்டு 68.63 கோடி காப்பு பணம் உயர்த்தப்பட்டு மொத்த காப்பு பணம் இருப்பு ரூ. 485 கோடி யாக அதிகரித்துள்ளது. பங்குதாரர்களுக்கு கடந்த ஆண்டு போல அதிகபட்ச பங்கு ஈவு தொகையாக 25 சதவீதம் வழங்கப் பட உள்ளது. லாப பங்கு டிவிடன்ட் தொகையை பங்குதாரர்களுக்கு எந்த விதத்திலும் தாமதமின்றி அவரவர் சேமிப்பு கணக்கில் உடனே வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தலைமை மேலாளர் தொடங்கி கடை நிலை ஊழியர்கள் வரை மொத்தம் ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிவ தால் நிதியின் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு போல போனஸ் கருணை தொகையாக 55 சதவீதம் அதாவது ரூ.19.49 கோடி வழங்கப் பட்டுள்ளது. எந்த நிறுவனத்திலும் இல்லாத அளவில் வாடிக்கையாளர் சேவையை பிரதானமாக கொண்டு செயல்படும் தொன்மையான நிறு வனமாக கும்பகோணம் பரஸ்பர சகாயநதி லிமிடெட் விளங்கி வரு கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக மக்க ளுக்கு சேவை செய்வது, குறைந்த வட்டியில் நகை கடன் விரைவாக வழங்குதல், மக்கள் நன்மதிப்புடன் வாடகை இன்றி பாதுகாப்பு பெட்டக வசதி போன்றவை நிதி நிறுவ னத்தின் சிறப்பு அம்சங்களாக உள்ளன. தற்போது 125 கிளைகளுடன் செயல்பட்டு வரும் நிதி நிறுவ னத்தில், புதிதாக 32 கிளைகள் திறக்கப்பட உள்ளன” என்றார். பேரவையில் பிரகாசம் மற்றும் துரைராஜ் ஆகியோர் நிதியின் இயக்குநர்களாக பங்குதாரர் களால் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். நிதியின் துணைத் தலைவரும் மயிலாடுதுறை தொகுதி நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.ராமலிங்கம், இயக்குநரும் கும்பகோணம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான அன்பழ கன், நிதியின் மேலாண் இயக்குநர் பி.ஆர்.பி. வேலப்பன் மற்றும் இயக்குநர்கள் கலந்து கொண்ட னர். மேலாண்மை இயக்குநர் பி.ஆர்.பி, வேலப்பன் நன்றி தெரிவித் தார்.