பாபநாசம்,டிச.12- தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தச் சாலையோரம் கட்டப்பட்ட மழை நீர் வடிகால் முழுமை பெறாமல், ஆங்காங்கே பள்ளமாய் உள்ளது. பல மாதங்களாக பள்ளம் மூடப்படாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் பள்ளத்தை கவனிக்கா விட்டால் அதில் விழ நேரிடும். இந்தப் பள்ளத்தை விரைந்து மூட வேண்டும் என்றும் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.