மயிலாடுதுறை, ஜன.9- அப்பாவி மக்களை தொடர்ந்து ஏமாற்றும் முத் தூட் ஃபின் கார்ப் நிறுவ னத்தின் மயிலாடுதுறை கிளை மீது உரிய நடவ டிக்கை எடுக்கக் கோரியும், உடனடியாக அதை மூட வேண்டும், தங்க நகைகளை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைக்கக் கோரியும் திங் களன்று மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் கச்சேரிரோட்டி லுள்ள நிறுவனத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பி. சீனிவாசன் தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், எஸ்.துரைராஜ், ப.மாரி யப்பன், சி.விஜயகாந்த், ஜி. வெண்ணிலா, மாவட்ட, ஒன் றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை இயங்கி வரும் முத்தூட் ஃபின் கார்ப் நிறுவனம் நுண் நிதி கடன் என்ற பெயரிலும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் என்ற பெயரிலும் எண்ணற்ற மக்களை ஏமாற்றி தங்க நகை களை ஏமாற்றியுள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக குத்தாலம் ஒன் றியம் ஸ்ரீகண்டபுரம் தென் கரையில் வசிக்கும் மீனாட்சி என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முத்தூட் ஃபின் கார்ப் நிறுவனத்தில் 50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். நுண் நிறுவன சட்டவிதிக்கு மாறாக அந்த பணத்திற்கு 2 பவுன் தங்க நகையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது. 2600 ரூபாயை மாதந்தோறும் மீனாட்சி அந் நிறுவனத்தில் 12 மாதம் கட்டி வந்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தால் தவ ணையை கட்ட முடியாமல் போயுள்ளது. இதனிடையே தவணை தொகையை முறையாக கட் டாததால் தங்க நகைகளை ஏலம் விட்டுவிட்டோம் எனக்கூறிய அந்நிறுவனம் மீனாட்சியிடம் தொடர்ந்து தவணைத் தொகையை வசூல் செய்துள்ளது. இதுதொடர்பாக கோட் டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் பல முறை பேச்சுவார்த்தை நடந்தும் அந்நிறுவன அதிகாரிகள் அலட்சியப்படுத்தி வருவ தாக தெரிவித்தனர்.