districts

மயிலாடுதுறையில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு ஆய்வு

மயிலாடுதுறை, ஆக.17 - மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் தமிழ்நாடு சட்டமன்ற மதிப் பீட்டுக் குழுவினர் ஆய்வுகளை மேற்கொண் டனர்.  குழுவின் தலைவர் சட்டமன்ற உறுப்பி னர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமை யில், மயிலாடுதுறை மாவட்டம் கீழநாஞ்சில் நாடு, மூவலூர், தலைஞாயிறு, தெண்ணாம் பட்டினம், தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஆய்வுக்குழுவில், மதிப்பீட்டுக்  குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பி னர்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (போளூர்), அம்மன் கே.அர்ச்சுணன் (கோய முத்தூர் வடக்கு), இரா.அருள் (சேலம் மேற்கு), க.அன்பழகன் (கும்பகோணம்), டி. ராமச்சந்திரன் (தளி), ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு), ஈ.பாலசுப்பிரமணியன் (சேலம் மேற்கு), எஸ்.ராஜகுமார் (மயிலாடு துறை), செல்லூர் கே.ராஜூ (மதுரை  மேற்கு) ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் அரசுத் துறைகளின் செலவு  மற்றும் நிதி பயன்பாடு ஆகியவற்றின் செயல்பாடு குறித்து இக்குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் சில முக்கி யத் துறைகளை தேர்ந்தெடுத்து, அந்த துறை யில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளும்.  அதன்படி தமிழ்நாடு சட்டமன்ற பேரவை யின் மதிப்பீட்டுக் குழு மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட கீழநாஞ்சில்நாடு பகுதி யில் பாதாள சாக்கடை நீருந்து நிலையத்தை யும், மூவலூரில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் காவிரியாற்றின் குறுக்கே மாப்படுகை  – கடலங்குடி சாலையில் பாலம் கட்டும் பணியி னையும், தொழில்துறையின் சார்பில் இயங்கக் கூடிய தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பான பணியையும் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, சீர்காழி வட்டம் எருக்கூர்  நவீன அரிசி ஆலை, நெடுஞ்சாலைத்துறை யின் சார்பில் தெண்ணாம்பட்டினத்தில் திரு முல்லைவாசல், கீழமூவர்கரை சாலை, வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் குறுக்கே பாலம் கட்டுதல் மற்றும் சாலை மேம்பாட்டுப்  பணி, பூம்புகார் சுற்றுலா மையத்தை உலக சுற்றுலா தரத்திற்கு இணையாக கொண்டு வருவதற்கான மேம்பாட்டு பணிகள், தரங் கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட டேனிஷ் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வரு வதையும், புது எருசலேம் ஆலயத்தின் பகுதி களை மேம்படுத்துவதற்கான பணிகளை யும் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக்  குழுத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினரு மான டி.ஆர்.பி.ராஜா தலைமையில் மன்னம் பந்தல் ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத்துறை, வனத்துறை, நக ராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு  துறைமுகங்கள் துறை ஆகிய துறைகளால்  மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் முன் னேற்றம் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.