திருப்பூர், நவ.13- திருப்பூர் மாவட்டத்தில் இரு தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால், அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகத்தினர் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத் துள்ளனர். மேலும், தொடர் மழை யால் திருப்பூர் மாநகர பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் வியாழன் மற்றும் வெள்ளியன்று தொடர்ச்சியாக மழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக திருப்பூர் யூனியன் மில் சாலை, காங்கேயம் செல்லும் சாலை மற்றும் ஈஸ்வரன் கோவில் செல் லும் சாலையை இணைக்கும் பாலத் தில் சாக்கடை கழிவு நீரும் மழை நீரும் ஆறு போல் சென்று கொண்டி ருந்ததால் வாகன ஓட்டிகள் அவ திக்கு உள்ளாகினர். இதையடுத்து, அசம்பாவிதம் ஏதும் நேரிடாமல் இருக்க போக்குவரத்து காவல்து றையினர் அவ்வழியே வாகனங்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைத் தனர். அதே போல் திருப்பூர் ஊத் துக்குளி சாலையில் இருந்து கோல் டன் நகர் செல்லும் ரயில் பாலத்தின் கீழ் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி யுள்ளது. மேலும், பிரதான சாலைக ளில் மழை நீர் வெள்ளமாக பெருக் கெடுத்து ஓடியது. கழிவுநீர் கால் வாய்கள் நிரம்பி சாலைகளில் வழிந் தோடியது. தாழ்வான பகுதிகளில் நீர் புகுந்தது. கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை யடுத்து பள்ளிகளுக்கு வியாழ னன்று மாவட்ட ஆட்சியர் விடு முறை அறிவித்தது குறிப்பிடத்தக் கது. மேலும், அமராவதி அணை நிரம்பி வருவதால் அமராவதிநகர், எலையமுத்தூர், கொழுமம், மடத் துக்குளம், கணியூர், தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வலி யுறுத்தப்பட்டுள்ளது. உடுமலை: உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி அணையில் நீர் நிரம்பி உள்ளது. மேலும், அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், அணை யின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வியாழனன்று நள்ளிரவு, அமராவதி ஆற்றில் இருந்து 25000 கன அடி நீர் திறக்கப்பட்டது. மேலும், உபநதி அணைகள் நிரம்பி உள்ளதால் 50000 கன அடிக்கு மேல் நீர் வரத்து அதிக ரிக்க வாய்ப்புள்ளது. எனவே அமரா வதி ஆற்றின் கரையோரப் பகுதி யில் உள்ள பொதுமக்கள் ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, கால் நடைகள் மேய்ப்பது போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண் டும் என மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். வெள்ளியன்று நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7264 அடியாகவும், அணையின் நீர் மட்டம் 86.36 அடியாகவும் இருந் தது. இதையடுத்து, அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி தண் ணீர் ஆற்றில் வெளியேற்றபடு கிறது. இந்நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக கொழுமத்தில் தங்க வைக்கப்பட் டுள்ள அமராவதி ஆற்றின் கரை யோர மக்களை ஆட்சியர் த. கிறிஸ்துராஜ் சந்தித்து பேசினார். உத்தரவை மதிக்காத தனியார் பள்ளிகள்: அவிநாசி ஒன்றியத்தில் 80க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாவட் டத்தில் இரு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு வெள்ளி யன்று விடுமுறை அறிவித்தி ருந்தார். இதை மதிக்காமல் அவி நாசி பேரூராட்சி, சேவூர் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஒரு சில தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டது.