திருச்சிராப்பள்ளி, மார்ச் 18- திருச்சிராப்பள்ளி இனாம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த வர் ஜிகார்அலி(45) இவர் சனிக் கிழமை இனாம்குளத்தூர் பகுதி யில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒருவர் சாலையைக் கடந்துள்ளார். இதனால் ஜிகார அலி இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச் சைக்காக இனாம்குளத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் இல்லாததால் அவருக்கு முதலுவி மற்றும் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்நிலையில் இனாம்குளத் தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருத்துவர்கள் இல்லாத தால் முதலுதவிகள் மற்றும் அவ சர சிகிச்சைகள் கூட மக்களுக்கு கிடைக்காததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர் மற் றும் பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணிகண் டம் ஒன்றியக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏழுமலை உள்பட அனைத்து கட்சி யினர் கலந்து கொண்டனர். அப்போது திங்கட்கிழமை மருத்துவரை நியமிப்பது. சுகா தார மையத்தை தரம் உயர்த்து வதற்கு அரசுக்கு பரிந்துரை செய் யப்படும் என உறுதியளித்தார் சட்டமன்ற உறுப்பினர் பழனி யாண்டி. இதையடுத்து முற்றுகை விலக்கிக்கொள்ளப்பட்டது.