districts

கொள்ளிட கரையோர கிராமங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி அமைச்சர் மெய்யநாதன் தகவல்

மயிலாடுதுறை, ஆக.6 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லலிதா தலை மையில் நடைபெற்றது. பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன், சீர்காழி  எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் சுற்றுச்சூழல் காலநிலை  மாற்றத் துறை அமைச்சர் மெய்ய நாதன் பேசியதாவது: கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து  70 ஆயிரம் கனஅடி தண்ணீர் கட லுக்கு சென்று கொண்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் குமார மங்கலம் முதல் அலக்குடி பகுதி வரை கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அலக் குடி, முதலைமேடு, நாதல் படுகை, திட்டுப்படுகை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. கொள்ளிடக் கரையோர கிராமங்க ளில் 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஊராட்சி செயலாளர்கள், விஏஓ-க்கள்,  ஊராட்சி தலைவர்கள் தங்கள் கிரா மங்களில் தங்கி மக்களுக்கு தேவை யான அனைத்து அடிப்படை வசதி களையும் செய்து கொடுக்க வேண்டும்.  ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் வசதிக்காக ஹெல்ப்லைன் வசதி  ஏற்படுத்தப்பட உள்ளது. அலக்குடி  பகுதியில் கொள்ளிடக் கரையை பலப் படுத்துவதற்கான  அனைத்து முன்னேற் பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அங்கு  கரையை பலப்படுத்த நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.120 கோடி மதிப் பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது. வெள்ள நீர் புகுந்து சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு முதலில் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீரின் வரத்து அதி கரித்தால் தேவைக்கு ஏற்ப மக்களை பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதற்கு அதி காரிகள் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக மயிலாடுதுறை அருகே  குமாரமங்கலம் - ஆதனூர் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டு மான பணிகள் நடந்த இடத்தில் செய்ய  வேண்டிய முன்னெச்சரிக்கை பாது காப்புகள் குறித்து அமைச்சர் மெய்ய நாதன், ஆட்சியர் லலிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.