districts

img

பாபநாசத்தில் ஆள் இல்லா கடை திறப்பு

பாபநாசம், அக்.3- காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாபநாசம் ரோட்டரி சங்கம் சார்பில்  ஆள் இல்லா கடை திறப்பு  நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் ரோட்டரி சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்களி டம் நேர்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 23-வது ஆண்டாக  ஆள் இல்லா கடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.  பாபநாசத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் அறி வழகன் தலைமை வகித்தார். ஆள் இல்லா கடையை மாவட்ட ஆளுநர்  செங்குட்டுவன் திறந்து வைத்தார். பாபநாசம் டி.எஸ்.பி பூரணி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.  பாபநாசம் புதிய பேருந்து நிலைய நிழற்குடை தற்காலிகமாக கடை யாக அமைக்கப்பட்டிருந்தது. மக்களிடம் நேர்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஒரு நாள் மட்டும் செயல்படும் இக்கடையில் வீட்டிற்குத் தேவையான கூடை, வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பிளாஸ்டிக்  பொருட்கள், சோப், டூத் பிரஷ், பேஸ்ட், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களின் விலை விபரம் எழுதப்பட்டு அதன் மீது ஒட்டப்பட்டிருக்கும்.  பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொண்டு பொருளின் மீதுள்ள விலையைப் பார்த்து கடையில் வைக்கப் பட்டுள்ள கல்லா பெட்டியில் போட்டு விட வேண்டும். மீதி பணம் இருந் தால் அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டும் தெரிவிக்கப்பட்டது.