districts

img

பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி திருவாரூரில் மனிதச் சங்கிலி இயக்கம்

திருவாரூர், மார்ச் 9 - மகளிர் தினத்தையொட்டி, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் திருவா ரூர் மாவட்ட மையத்தின் சார்பாக சிறப்பு கருத்தரங்கம் மற்றும் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் அலுவ லக கட்டிடத்தில் நடைபெற்ற கருத்தரங்கத் திற்கு, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.சுதாகர் மற்றும் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர். அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலச் செயலா ளர் குரு.சந்திரசேகரன் துவக்கவுரை யாற்றினார். முன்னதாக அரசு ஊழியர் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் எஸ்.செங்குட்டு வன், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் த.தமிழ்சுடர், ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர்  பி.புவனேஷ்வரி ஆகியோர் கருத்துரை யாற்றினர். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட-மாநிலச் செயலாளர் செ.பிரகாஷ் நிறைவுரையாற்றினார். கருத்தரங்கத்தை தொடர்ந்து,  பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி திருவா ரூர் தெற்கு வீதியில் இருந்து நகராட்சி அலு வலகம் அருகில் வரை 200-க்கும் மேற்பட்ட  பெண்கள் கலந்து கொண்ட மனித சங்கிலி  இயக்கம் நடைபெற்றது.