சிவகங்கை, மார்ச் 6- காரைக்குடி மாநக ராட்சியில் இளநிலை உதவி யாளராக பணியாற்றும் ஷர் மிளா பர்வீனை மிரட்டியும், இழிவாக பேசி விடுமுறை தினத்தில் பணிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தி யும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு அவரை தற்கொலைக்கு தூண்டிய மாநகராட்சி வருவாய் அலு வலர் வெங்கடாஜலபதி மற் றும் மாநகராட்சி ஆணையர் சித்ரா மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க காரைக் குடி வட்டக்கிளை சார்பில் வியாழனன்று மாலை 5 மணி யளவில் காரைக்குடி மாநக ராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்குடி கிளைத் தலைவர் ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். மாவட் டத் தலைவர் கண்ணதாசன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பி னர் ஜீவா ஆனந்தி, தமிழ் நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க நிர்வாகி சுந்த ரம், வளர்ச்சித்துறை மாவட்ட இணைச் செயலாளர் சிவா, தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஆட்சிப்பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் கோடை மலைக்குமரன், தமிழ்நாடு முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் கழக மாவட்ட அமைப்புச் செயலாளர் பழ னியப்பன், தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்க மாவட்டப் பொருளாளர் முத்தையா, தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்க நிர்வாகி சுமதி, தமிழ்நாடு விடுதிப் பணியா ளர் சங்க மாவட்டத் தலை வர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரை யாற்றினார். கிளைச் செயலாளர் முரு கேசன் நன்றி கூறினார்.