districts

திருச்சி முக்கிய செய்திகள்

வெளிநாட்டு வேலை: ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞ ரிடம் ரூ. 12 லட்சம் மோசடி செய்த நபரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கண்டியர் தெருவைச் சேர்ந்தவர் டி. ஜெயக்குமார் (37). இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை பார்த்தார். இதன் மூலம் மதுரை யாகப்பா நகரைச் சேர்ந்த மதன மீரான் (41), அவரது மனைவி ஜெசினாவை  ஜெயக்குமார் தொடர்பு கொண்டார். அப்போது, கனடா நாட்டில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஜெயக்குமாரை நம்ப வைத்து, அவரிடம் மதன மீரானும், ஜெசினாவும் ரூ. 12 லட்சம் கேட்டனர். இதைத்தொடர்ந்து, பல்வேறு தவணைகளில் மதன மீரான், ஜெசி னாவின் வங்கிக் கணக்குக்கு ஜெயக்குமார் ரூ. 12 லட்சம் அனுப்பினார். இதையடுத்து, ஜெயக்குமாருக்கு மதன மீரானும், ஜெசினாவும் போலியான ஆவ ணங்களை அனுப்பி வைத்தனர். ஆனால், இருவரும் கூறியபடி ஜெயக்குமாருக்கு வேலை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் ஜூலை 31 ஆம் தேதி புகார் செய்தார். இந்த புகார் மனு மாவட்டக் குற்றப் பிரிவுக்கு பரிந்துரை செய்யப் பட்டது. இதன் பேரில், மாவட்டக் குற்றப் பிரிவினர் வழக்குப் பதிந்து மதன மீரானை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து ஜெசினாவை தேடி வருகின்றனர். 

குடும்பத் தகராறு: மகளை தூக்கிலிட்டு தந்தை தற்கொலை

குடும்பத் தகராறு: மகளை தூக்கிலிட்டு தந்தை தற்கொலை தஞ்சாவூர் : தஞ்சாவூர் அருகே, குடும்பத் தகராறு காரணமாக புதன்கிழமை 4 வயது மகளை தூக்கிலிட்ட தந்தை, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  கோரிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜே.சி.பி. ஆபரேட்டர் முருகேசன் (42). இவரது மனைவி சுகன்யா (29), மகள் நவ்யாஸ்ரீ (4). இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு சுகன்யா புதன்கிழமை காலை கொண்டு சென்றார். வீட்டில் முருகேசனும், நவ்யாஸ்ரீயும் இருந்தனர். பின்னர், சுகன்யா குழந்தையுடன் வீட்டுக்கு பிற்பகலில் திரும்பினார். அப்போது, முருகேசனும், நவ்யாஸ்ரீயும் தனித்தனியாக சேலையில் தூக்கு மாட்டிய நிலையில் இருந்தனர். சுகன்யாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை மீட்டு தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரி வித்தனர். தகவலறிந்த தாலுகா காவல் நிலையத்தினர்  இருவரது உடல்களையும் மீட்டு  உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முருகேசன் 2 மாதங்களாக வேலை க்கு செல்லவில்லை என்பதும், இதனால், கணவன் - மனைவி இடையே குடும்பத் தகராறு நிலவியதும், இதன் காரணமாக நவ்யாஸ்ரீயை முருகேசன் தூக்கிலிட்டு, தானும் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது.

மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சான்று  பெறாத நபர்களுக்கான சிறப்பு முகாம் 

மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சான்று  பெறாத நபர்களுக்கான சிறப்பு முகாம்  திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் முதல், டிசம்பர் மாதம் வரை மகளிர் திட்ட பணியாளர்கள் மூலம் உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனா ளிகளுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், மாற்றுத்திறனாளிகளாக இருந்து இதுவரை மாற்றுத்திறனாளிக்கான மருத்துவச் சான்று பெறாத நபர்களுக்கான சிறப்பு முகாம் மருத்துவமனைகளில் நடத்தப்படவுள்ளது. திருவாரூர் மருத்துவகல்லூரியில் நவ.9 அன்று கொரடாச்சேரி வட்டம், நவ.13 அன்று குடவாசல் வட்டம், நவ.14 நீடாமங்கலம் வட்டம், நவ.16, வலங்கைமான் மற்றும் நன்னிலம், நவ.19, 21 ஆகிய தினங்களில் திருவாரூர், நவ.23 மன்னார்குடி, நவ.26 கோட்டூர், நவ.28 திருத் துறைப்பூண்டி, நவ.30 முத்துப்பேட்டை ஆகியற்றைச் சார்ந்த மாற்றுத் திறனாளிளுக்கு காலை 9 மணி முதல் 12 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.  எனவே, மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பின்போது மகளிர்திட்ட பணியாளர்க ளிடம் மாற்றுத்திறனாளி பதிவுசெய்து மாற்றுத்திறனாளிகளாக இருந்து இதுவரை மருத்து வச் சான்று பெறாத புதிய நபர்கள் தங்களது ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், சமீபத்திய கடவுசீட்டு அளவிலான புகைப்படம், குடும்ப அட்டை, நகல், இதுவரை மருத்துவம் பார்த்த சீட்டுகள், அருகிலுள்ள சேவைமையத்தில் www.swalvambancard.gov.in என்ற இணையதளமுகவரியில் பதிவு செய்து அதன் ரசீது ஆகியவற்றுடன் கலந்துகொண்டு, மருத்துவச் சான்று மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகியவை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்த வட்டார வளர்ச்சி அலு வலகத்திலிருந்து மருத்துவகல்லூரிக்குச் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் போராட்டம்

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் போராட்டம் திருச்சிராப்பள்ளி : சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை உயர்நீதி மன்ற தீர்ப்பின்படி பணிக்காலமாக முறைப்படுத்தக்கோரி, புதனன்று திருச்சி டிவிஎஸ் டோல் கேட் அருகிலுள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு மாவட்ட தலை வர்கள் ஜீவானந்தம், ஜனார்த்தனன், மகாலிங்கம், கணேசன், ரமேஷ் ஆகியோர் தலைமை யில் சங்கொலி முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5,200ல் இருந்து ரூ.20 ஆயிரமாக மாற்றம் செய்ய வேண்டும். தர ஊதியம் ரூ.1,900 உடனே வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின், பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு கருணை அடிப்படை யில் பணி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மண்டல தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செயலாளர் பழனிச்சாமி, மாநிலத்துணைத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் பேசினர். இதில், நிர்வாகிகள் பிரான்சிஸ், பிரேம்குமார், கருணாநிதி.  ரவிச்சந்திரன், ஸ்ரீதர், முத்துக்கருப்பன் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். முடிவில் மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் நன்றி கூறினார்.

3 சதவிகித அகவிலைப்படி உயர்வை வழங்கக் கோரிக்கை

குடிநீர் வடிகால் வாரியத்தினர் துணை முதல்வரிடம் மனு

திருச்சிராப்பள்ளி, நவ.11-  தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் நலச்சங் கத்தின் சார்பில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலினிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழ்நாட்டின் முக்கிய மான மக்கள் சேவை செய்யும் தமிழ்நாடு குடிநீர்  வடிகால் வாரியம், மறைந்த முன்னாள் முதல்வர் கலை ஞரால் உருவாக்கப்பட்டு பொன்விழா கண்டு பணி செய்து வரும் பொதுத்துறை நிறுவனமாகும்.  கடந்த 18.10.24அன்று தமிழக முதல்வர் அறிவித்த 3 சதவிகித அகவிலைப்படி  உயர்வு இன்று வரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் மட்டும் வழங்க வில்லை.  இதனால் ஆயிரக்கணக் கான பணியாளர்கள் மற்றும் பத்தாயிரம் ஓய்வூதியர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்படு வதால் தாங்கள் உரிய நடவ டிக்கை எடுத்து, அக விலைப்படி விரைந்து கிடைக்க ஆவன செய்ய வேண்டுகிறோம் என கூறி யிருந்தனர். மனுவை, தமிழக துணை முதல்வரிடம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணி யாளர்கள் சங்க மாநில தலை வர் சுரேஷ், மாநில பொதுச் செயலாளர் இராவணன், மாநில பொருளாளர் ஹரி பிரசாத் மற்றும் குடிநீர் வடி கால் வாரிய ஓய்வூதியர்கள் நலச்சங்க மற்றும் அக விலைப்படி மீட்புக்குழு அமைப்பாளர் சம்பந்தம், நிர்வாகிகள் நாகேந்திரன், ஓண்டிமுத்து, துரைராஜ் ஆகியோர் வழங்கினர். 

முதல்வர் மு.க.ஸ்டாலின்  நவ.15 இல் அரியலூர் வருகை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல்

அரியலூர், நவ.7- அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடக்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவ.15 ஆம் தேதி வருகை தரவுள்ளார் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரி வித்தது: அரியலூர் மாவட்டத்துக்கு நவ.15 ஆம் தேதி வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவையில் அறிவித்தபடி ஜெயங்கொண்டம் அடுத்த மகிமைப் புரத்தில் சிப்காட் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், அரியலூரில் நடைபெறும் அரசு விழாவில், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற பணிகளுக்கு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தும் உரையாற்றுகிறார். பின்னர் பெரம்பலூரில் நடைபெறும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறார் என்று தெரிவித்தார். 

சிறுமி பாலியல் வன்கொடுமை : முதியவர் கைது

தஞ்சாவூர், நவ.7- தஞ்சாவூர் அருகே, சிறு மியை பாலியல் வன்கொ டுமை செய்த முதியவரை, காவல் துறையினர் புதன் கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே பனங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (60). இவர் 13 வயது சிறு மியை செவ்வாய்க்கிழமை இரவு, பாலியல் வன்கொ டுமை செய்தார். இது குறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக் குப்பதிவு செய்து ராமச்சந்தி ரனை புதன்கிழமை கைது செய்தனர்.

நவ.9 பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம்

நவ.9 பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் பெரம்பலூர் : உணவுப்பொருள் வழங்கல் சம்மந்தமான பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்   நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரி வித்துள்ளார். பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டை களில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும்  முகாம், பெரம்பலூர் வட்டம், கல்பாடி(தெற்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ச.சுந்தரராமன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலு வலர் வி.வாசுதேவன்  தலைமையிலும், குன்னம் வட்டம், பேரளி(தெற்கு) கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) ஜெயஸ்ரீ  தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், ஆதனூர் (வடக்கு) கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலர் ரெ.சுரேஷ்குமார் தலைமையிலும் நவ.9 சனிக்கிழமை அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.  இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்மந்தமான, குறைகளைத் தெரிவித்து, பயனடையுமாறு மாவட்ட  ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

கலசலிங்கம் பல்கலை.யில் “மேட்லேப் மாணவர் குழு” துவக்கம்

கலசலிங்கம் பல்கலை.யில் “மேட்லேப் மாணவர் குழு” துவக்கம் ஸ்ரீவில்லிபுத்தூர், நவ.7- ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில், இசிஇ துறை சார்பில், “மேட்லேப் மாணவர்கள் குழு’ துவக்கவிழா துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன்,  முனைவர் பி. சிவகுமார்,  ஐஆர் இயக்குநர் முனைவர் சுப்ரகாஷ்  மற்றும்  துறைத் தலைவர் முனைவர் ஏ.முத்துக்குமார் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர், பெங்களூரு, டெரிட்டரி மேலா ளர், அருள்செல்வம், மேட்லேப் மாணவர்கள் குழுவைத்  துவக்கிவைத்து, குழுவின் முக்கியத்துவம் மற்றும் நன்மை கள் குறித்து உரையாற்றினார். மேலும்,”சுமார் 90,000  தொழிற்சாலைகள், தங்கள் பகுப்பாய்விற்கு மேட்லேப்பை பயன்படுத்துகின்றன” என்றார். மேத்ஒர்க்ஸ் மேலாளர் தரிணி ராஜ், ஏஆர்ஆர் நிறுவன‌  மேலாளர் கவுதம் ராஜ்மோகன்,  குழு செயல்பாடுகள் குறித்து பேசினர்.