districts

img

மக்கள் சந்திப்பு இயக்கம்

ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தென்சென்னை மாவட்டத்தில் நவ.15ந் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது. இதனையொட்டி ஆலந்தூர் பகுதி, நங்கநல்லூர் மற்றும் மூவரசம்பட்டு கிளைகளின் கிளர்ச்சி பிரச்சார இயக்கத்தை வியாழனன்று (நவ.7) கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தொடங்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.