புதுக்கோட்டை, ஜன.8:-: புதுக்கோட்டை மாவட் டம் இலுக்பூர் அருகே பல தலைமுறைகளாக சாகுபடி செய்துவரும் இச்சங்குடி பட்டியலின மக்களை நிலத்தி லிருந்து வெளியேற்றும் நட வடிக்கைகையை புதன்கிழ மையன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தடுத்து நிறுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா கோத்ராப்பட்டி ஊராட்சி இச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள தளிஞ்சி கிராத்தில் உள்ள சுமார் 50 ஏக்கர் அளவில் உள்ள நிலத்தில் காலம் காலமாக விவசாயம் செய்து வருகின்றனர். மேற்படி நிலத்தில் சாகு படி முடிந்ததும் சம்பந்தப் பட்ட நில உரிமையாளர்களு க்கு சேர வேண்டிய குத்த கையை தவறாமல் செலுத்தி வந்துள்ளனர். மேற்படி நிலத்தில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்த விவசாயிகளை வெளியேற்றிவிட்டு நிலத் தை ரியல் எஸ்டேட் கும்பலி டம் விற்பதற்கு நிலத்தின் உரிமையாளர்கள் முயற்சி த்து வருவதாகக் கூறப்படு கிறது. இது அப்பகுதி பட்டி யலின மக்களை மிகவும் அதிர்ச்சியிலும் வேதனையி லும் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், நில உடை மையாளர்கள், காவல்துறை யினரின் உதவியுடன் நில அளவை செய்ய புதன்கிழ மை மேற்படி நிலத்திற்கு வந்தனர். தகவல் அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.சுப்பையா மற்றும் எம்.ஷோஷி, ஏ.தேவராஜன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். மேலும், அங்கு நில அளவை செய்வதை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அந்த விவசா யிகளிடம் பேசிய சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், எக்காரணம் கொண்டும் உங்களை நிலத்தில் இருந்து வெளி யேற்ற அனுமதிக்க மாட் டோம். தொடர்ந்து உங்க ளுக்கான சாகுபடி உரி மையை பெற்றுத்தர நட வடிக்கை எடுப்போம் என அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார்.