முத்துப்பேட்டை. ஜன, 8- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உதயமார்த்தாண்டபுரம் பெட்ரோல் பங்க் பின்புறம் சுமார் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலை யில் உள்ளன. அறுவடை இயந்திரம் கிடைக்கா ததால் அறுவடைக்கு தயாரான சம்பா கதிர்களை விவசாயிகள் குடும்பத்தினரே அறுவடை செய்து வருகின்றனர் . முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள உதயமார்த்தாண்டபுரம், சங்கேந்தி, எடையூர், மாங்குடி, கள்ளிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சம்பா, நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. ஒன்றியம் முழுவதும் சம்பா நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்க ளை விரைவில் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் கடந்த ஆண்டு (2024) இறுதியில் பெய்த அதீத கனமழை மற்றும் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் நெற்கதிர்கள் சாய்ந்து சேத மடைந்தன. சில இடங்களில் மழைக்கு தப்பிய சம்பா நெற் பயிர்களுக்கு விவசாயிகள் உரம் போட்டு பராமரித்து வந்தனர். பல்வேறு சிரமங்களு க்கு இடையே வளர்ந்து தற்போது அந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. ஒருசில இடங்களில் நெற் பயிர்க ளை அறுவடை செய்து வருகின்றனர். அறு வடை இயந்திரங்கள் கிடைக்காத காரணத்தா லும் ஒரு சில இடங்களில் விவசாயிகளே நெற் கதிர்களை அறுவடை செய்து ரோட்டில் கதிர்களை பரப்பி டிராக்டர் மூலம் கதிரடிக்கின்றனர். கூலி கொடுக்கக்கூட நெல் விளையவில்லை இதுகுறித்து விவசாயி கூறுகையில், முன்பெல்லாம் 2 போகம் சாகுபடி செய் வோம். தற்போது ஒரு போகம் மட்டுமே நடக்கிறது. கடந்த ஆண்டு(2024) பெய்த கன மழையில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின. வயல்களில் தேங்கியிருந்த தண் ணீரை வெளியேற்றி பயிர்களுக்கு உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்களை தெளித்தோம். அதன் காரணமாக பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராகி விட்டன. தற்போது அறுவடை செய்ததில் மா ஒன்றுக்கு 10 முட்டைகள் கிடைக்க வேண்டிய நிலையில் 4 மூட்டைகளே கொள்முதல் செய்கிறோம் இது எங்களுக்கு பெருத்த நஷ்டமாகும் அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்தால் அதற்கு கூலி கொடுக்கக்கூட நெல் விளைய வில்லை அதனால் நாங்களே அறுவடை செய்கிறோம். அறுவடை இயந்திரம் கிடைக்கா ததால் எங்கள் குடும்பத்தினர் சேர்ந்து அறு வடை செய்து நெல்லை தூற்றி வருகிறோம். உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் பாதிக்கப் பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட எங்களை போன்ற விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.