districts

மின் ஊழியர் சிறப்பு பேரவை

தஞ்சாவூர், ஜூலை 3-  

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக, ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் மத்திய அமைப்பு (சிஐடியு)  ஏன் கையெழுத்திடவில்லை என்பதை விளக்கி தஞ்சாவூ ரில் ஞாயிறன்று சிறப்பு பேரவை நடைபெற்றது.

   மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்டத் தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். வட்டச்  செயலாளர் பி.காணிக்கைராஜ், வட்டப் பொருளாளர் சங்கர், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் து.கோவிந்த ராஜூ, மாநிலச் செயலாளர் எஸ்.ராஜாராமன் ஆகி யோர் உரையாற்றினர். மாநில பொதுச் செயலாளர்  எஸ்.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். பேரவையில் தீக்கதிர் ஆண்டு சந்தா 13, அரையாண்டு சந்தா 1 ஆகி யவை வழங்கப்பட்டன.