மயிலாடுதுறை, நவ.2- மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அருகேயுள்ள காலமநல்லூரில் உள்ள அம்மனாற்றில் ஏற்பட்டிருந்த உடை ப்பை நீர்வளத்துறை (பொதுப்பணித் துறை) அதிகாரிகள் நேரில் பார்வை யிட்டு ஜேசிபி இயந்திரம் மூலம் அடைத்து சரி செய்தனர். வடகிழக்கு பருவமழை தீவிரம டைந்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்க ளாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலோர கிராமங்களான காலமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குமா ரக்குடி, சங்கேந்தி, வடக்கட்டளை, சின்னமேடு பகுதிகளில் பாசன வடிகால் ஆறுகளான அம்மனாறு, சேவகன் ஆறு ஆகிய இரு ஆறுகளின் வழியாக கடல் உப்புநீர் உட்புகுந்தது. இதனால் அப்பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு மூலம் 1200 ஏக்கரில் விதைப்பு செய்யப்பட்டு முளைவிட்ட நெற்பயிர்கள், சுமார் 800 ஏக்கர் அள விற்கு உப்பு நீரால் கருகி நாசமானது. பாதிப்பு குறித்து அறிந்த தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எஸ்.துரைராஜ், மாவட்ட தலை வர் டி.சிம்சன், சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வீ.எம்.சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவா ரணம் வழங்க வேண்டும். கடல்நீர் உட்பு காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து தீக்கதிரில் 1.11.2022 அன்று படத் துடன் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் விஜயபாஸ்கர், தரங்கம் பாடி வட்டாட்சியர் புனிதா, செம்ப னார்கோயில் வேளாண்மை உதவி இயக்குநர் தாமஸ் உள்ளிட்ட துறை அதி காரிகள் புதனன்று நேரில் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கையை மேற் கொண்டனர். உப்புநீர் அதிகளவில் ஊருக்குள் ளும், விளைநிலங்களுக்கு உள்ளும் புகுவதற்கு காரணமாக அம்மனாற்றில் இருந்த உடைப்பை ஜேசிபி இயந்திரம் மூலம் அடைத்து சரி செய்தனர். மேலும் நிரந்தரமாக இப்பகுதிகளில் கடல்நீர் உட்புகாதவாறு தடுப்புகள் அமைக்க ஆய்வுகள் மேற்கொண்டு நட வடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் நீர்வளத்துறை (பொதுப்பணித்துறை) அதிகாரிகள் தெரிவித்தனர்.