districts

img

வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்குக!: சிபிஎம் சாலை மறியல்

மயிலாடுதுறை, நவ.18 - வரலாறு காணாத அதீத கனமழை யால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நெற்பயிர்க ளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீட்டை கால தாமதமின்றி வழங்க  வேண்டும். இலுப்பூர் ஊராட்சி வடக்குத் தெரு உட்புற சாலையையும், முனிவேலங்குடி, தெற்குத்தெரு, பள்ளி வாசல் தெரு ஆகிய சாலைகளையும் மேம்படுத்தி புதிய சாலையை அமைக்க  வேண்டும். ஊருக்குள் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இலுப்பூர், உத்திரங்குடி ஊராட்சி களிலுள்ள வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி முனிவேலங்குடி பேருந்து  நிறுத்தத்தை உடனே கட்டிக் கொடுக்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம்  தரங்கம்பாடி வட்டம் இலுப்பூர் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.  ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச் சந்திரன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், ஜி.வெண்ணிலா, வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஐயப்பன் மற்றும் மாவட்ட, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  போராட்டத்தை அறிந்த வரு வாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி  கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.