districts

img

ஆக்கிரமைப்பை அகற்றக் கோரி சிபிஎம் சாலை மறியல்

கடலூர்,டிச.23- விருத்தாசலம் அருகே உள்ள ராஜேந்திரபட்டினத்தில் ஆக்கிரமைப்பை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், ராஜேந் திர பட்டினத்தில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான லஸ்கர் குடியிருப்பை தனி நபர் ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதை அகற்ற வேண்டும், ராஜேந்திர பட்டினம் ஊராட்சி யில் ஒன்றிய துவக்கப் பள்ளி  கழிப்பறை நிலத்தை ஆக்கிர மித்து தனிநபர் வீடு கட்டி இருப்பதை அகற்றி, சுற்றுசுவர் அமைத்து மீண்டும் கழிப்பிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். பழங்குடியை சேர்ந்த இரு ளர் இன மக்கள் வாழும் பகுதி யில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும், சுடுகாட்டிற்கு இடம்  ஒதுக்க வேண்டும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி அக லப்படுத்தி புதிய சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப் பட்டன. வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன் தலைமையில் நடைபெற்ற மறியலில், வட்டக்  குழு உறுப்பினர் எம்.ஜே.நெல்சன், நகர் குழு உறுப்பினர்கள் பி.செந்தில், கே.சேகர், கிளைச் செயலாளர் சட்டநாதன், வண்ணான் குடிகாடு கிளைச் செயலாளர் வீராசாமி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்தினர். அப்போது, உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.