திருச்சிராப்பள்ளி, நவ.9 - ரயில்வே தொழிற்சங்க அங்கீ காரத் தேர்தல் டிசம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடைபெறு கிறது. இதையொட்டி டி.ஆர்.இ.யு பொன்மலை பணிமனை அனைத்து கிளைகள் சார்பில் சனிக்கிழமை பொன்மலை ஆர்மரி கேட் அருகே சிறப்பு வாயிற்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு டி.ஆர்.இ.யு உதவி கோட்டத் தலைவர் லெனின் தலைமை வகித்தார். உதவி பொதுச் செயலாளர் சந்தான செல்வம் முன்னிலை வகித்தார். பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் பேசுகையில், “டி.ஆர்.இ.யு தொழிற்சங்கம் அனைத்துத் தொழிலாளர்களுக் கும் ஒரு நிரந்தரமான வேலை வாய்ப்பு வேண்டும் என்பதற்கா கவே போராடுகிறது. காண்ட்ராக்ட் முறைதான் ஒழிக்கப்பட வேண்டும் என கூறுகிறது. ஆனால் காண்ட் ராக்ட் தொழிலாளருக்கு, நிரந்தர ஊழியர்களின் சம்பளம் கொடுத்து நிரந்தரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். கன்வென்ஷன் கமிட்டி யில் ரயில்வே மருத்துவமனையை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை தடுத்தது டி.ஆர்.இ.யு. டி.ஆர்.இ.யு வெற்றி பெற்றால் அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும். எனவே நட்சத்திர சின்னத்தில் வாக்களித்து டி.ஆர். இ.யு-வை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார். டி.ஆர்.இ.யு செயல் தலைவர் ஜானகிராமன் பேசுகையில், “ரயில்வே தொழிலாளர்களுக்கு இன்சென்டிவை உயர்த்த வேண்டும். அரியர் வழங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, நிர்வாகம் பயோ மெட்ரிக் கண்டி ஷன் வைத்ததை பேச்சுவார்த் தைக்கு சென்றவர்கள் ஏற்றுக் கொண்டது எந்த விதத்திலும் நியா யம் இல்லை. அவர்கள் இப்போது ரயில்வே வேலையில் இல்லை. பேச்சுவார்த்தை குறித்த ஒரு புரித லும் இல்லை. மேலும் அவர்களுக்கு தொழிலாளர்கள் நலனில் அக்கறையும் இல்லை. ஒரு நிமிட தாமதம் ஒருநாள் விடுமுறையா...? இன்சென்டிவ் என்பது வருகை யுடன் தொடர்புடையது அல்ல. அது உற்பத்தியுடன் தொடர்பு டையது. பயோ மெட்ரிக் முறையில் ஒரு நிமிடம் தாமதம் ஆனாலும், ஒரு நாள் முழுவதும் லீவாக கணக்கிடப் படுகிறது. பயோமெட்ரிக் முறை யில் கிரேஸ் நேரத்தை அதிகரிக்க வேண்டுமென டி.ஆர்.இ.யு மட்டுமே வலியுறுத்தி வருகிறது. பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஷாப்பில் பயோ மெட்ரிக் முறையில் ஒரு நிமிடம் தாமதம் என 146 தொழிலா ளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை. இதனை எதிர்த்து டி.ஆர். இ.யு - ஐ.டி ஆக்ட் மூலம் போராடி, அந்த தொழிலாளர்களுக்கு நியா யத்தை பெற்று தந்தது. இதை பெட ரேஷன் வாங்கித் தரவில்லை. தொழிலாளர்களுக்கு ஏற்படும் குறைகள் குறித்து கேள்வி கேட்க அவர்கள் தயாராக இல்லை. தொழி லாளர்களுக்கு ஓ.டி, இன்சென்டிவ் அதிகரிக்க வேண்டும் என டிஆர்இயு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. தனியார்மயத்தை தடுத்திட... ரயில்வே தொழிலாளர்களின் பேப்பர் பாஸ் ஒழிக்கப்பட்டு இ-பாஸ் கொண்டு வரப்பட்டதால், ரயில்வே தொழிலாளர்கள் வேலைக்குக்கூட ரயிலில் செல்ல முடியாத நிலை உள்ளது. சீசன் பாஸ் எடுத்துச் செல்லும் அவல நிலை உள்ளது. இதற்கு யார் காரணம்? என்.பி.எஸ் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுத்த ஒரே ரயில்வே சங்கம் டி.ஆர்.இ.யு. யூ.பி.எஸ் திட்டத்தை ஏற்றுக் கொள்வது தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகம். 8 ஆவது ஊதிய குழுவை அமைக்க வேண்டும். தனியார்மயத்தை தடுக்க வேண்டும். அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஐஆர்டி/ஐ.டி.டி இட மாற்றம் கிடைக்க வேண்டும். என்.பி.எஸ், யு.பி.எஸ் திட்டத்தை ஒழித்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற ரயில்வே தொழிலாளர் களின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டி.ஆர்.இ.யு தொடர்ந்து போராடி வருகிறது. இன்றைய கோரிக்கை கள்தான் பின்னாளில் சட்டமாக மாறும். எனவே ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் வாக்களித்து டி.ஆர்.இ.யு-வை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.