districts

இறந்த ஆசிரியரின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்

மயிலாடுதுறை, ஜூலை 2 -

     மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உயிரிழந்த ஓய்வு பெற்ற ஆசிரியரின் உடல் திருவாரூர் மருத்துவக் கல்லூ ரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

    திருக்கடையூர் மேலவீதியைச் சேர்ந்தவர் ஆசிரியர் நாக ராஜன் (87). இவர் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட மாத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளி யில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பின்னர் பல்வேறு சமூகப் பணிகளை தொடர்ந்து செய்து வந்த  நிலையில், உயிருடன் இருக்கும்போதே. தான் இறந்த பிறகு உடலை தானமாக வழங்க வேண்டும் என மகன் எழில்நம்பி யிடம் (திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி தலைவர்) கூறி யிருக்கிறார்.  

    இந்நிலையில் வெள்ளியன்று இறந்த அவரின் உடலை  சனிக்கிழமை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினர். மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், மாணவர்கள் உடலைப் பெற்றுக் கொண்டனர்.