திருவாரூர்,ஜன.8- சென்னை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பணி பூந்தோட்டம் கடைத்தெருவில் மட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டித்தும். சாலை அகலப்படுத்தும் பணிகளை உடனே துவக்கிட வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றியம் சார்பாக பூந்தோட் டம் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேசிய நெடுஞ்சாலைப் பணி தற்போது பூந்தோட்டம் பகுதியில் கடந்த இரண்டு மாதமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.இதனால் அந்த பகுதி மக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விபத்தில் சிக்கிய வர்களை ஆம்புலன்சில் கொண்டு செல்ல முடியாத அவல நிலையில் சாலை உள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.எம்.சலாவுதீன் தலைமை வகித்தார், கிளைச்செயலா ளர்கள் பூந்தோட்டம் மாரி.செல்வராஜ், அகர திருமளம் பி.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்டச் செய லாளர் டி.முருகையன் உரையாற்றி னார், நன்னிலம் ஒன்றிய செயலாளர் தியாகு ரஜினிகாந்த்,செயற்குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன்,மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெ.முகமது உதுமான், கே.தமிழ்ச்செல்வி மற்றும் பலர் பங்கேற்றனர். போராட்ட இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடைவீதி பகுதியில் சாலை விரி வாக்க பணியில் தேக்கம் உள்ளதாக வும்,உடனடியாக விரிவாக்க பணியை மேற்கொண்டு சாலையை அகலப்படுத் தும் வேலை துவங்கும் என்று உறுதி அளித்தனர். இதனை அடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.