districts

img

படுகொலை செய்யப்பட்ட தோழர் ஜெ.நாவலன் வழக்கை விரைந்து விசாரணை நடத்துக!

திருவாரூர்,டிச.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டத் தலைவர்களின் ஒருவரான பேரளம் தோழர் ஜெ.நாவலன் படுகொலை செய்யப்பட்டு 10- ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை .வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை துரிதப்படுத்த கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரை நேரில் சந்தித்து சிபிஎம் தலைவர்கள் வலியுறுத்தி னர். குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றிட வழக்கை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்கு மாறு சிபிஎம் மாவட்ட செயலாளர் டி.முருகையன் தலைமையில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவா ருர் மாவட்டம்,நன்னிலம் தாலுகா, பேரளம் பகுதியை சேர்ந்த ஜெ.நாவலன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சார்ந்த விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவராக செயல்பட்ட போது. கள்ளச் சாராயத்திற்கு எதிராக களப்பணி யாற்றியதால் அப்பகுதியில் இருந்த பன்னீர் என்ற ஆதிக்க சமுகத்தை சார்ந்த சமுக விரோதியால் அவரது தரப்பினரால் கடந்த 2014- ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். மேற்கண்ட வன்கொலை சம்பவம் குறித்து பேரளம் காவல்துறையில் உரிய சட்டப்பிரிவுக ளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலும் மேற்கண்ட கொலை செய்யப்பட்ட நாவலன் பட்டியல் சமுகத்தை சார்ந்தவர் என்பதால் அதனை வன்மமாக கொண்டும், மேற்கண்ட கொலை சம்பவம் நடந்ததால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் மேற்கண்ட கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட வகையில் பெரும் கால தாமதத்திற்கு பின்னர் சம்மந்தப்பட்ட காவல் துறையால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இப்போது திருவாருர் மாவட்டத்திற்குரிய வன் கொடுமை தடுப்பு விசாரணையின் /குடிமை யியல் நீதிமன்றம் (PCR Court) தஞ்சாவூரில் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள தால் அங்கு தாக்கல் செய்யப்பட்டு எவ்வித விசாரணையும் இன்றி இருந்து வருகின்றது. இதனால் வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளும் உரிய சாட்சிகளும் பலபேர் இறந்து போய்விட்ட னர். மேலும் சாட்சிகள் இதர வழக்கின் எதிரிக ளால் கலைக்கப்படும் அபாயமும் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. எனவே சம்மந்தப்பட்ட காவல்துறையை கொண்டு அரசு குற்றத்துறைக்கும் (Director of Prosecution) மற்றும் மேற்கண்ட வழக்கின் திரு வாரூர் மாவட்டத்திற்கான மேற்படி நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞருக்கு தகவல் கொடுத்து மேற்படி வழக்கை விரைவாக விசாரணை செய்ய வழக்கை நீதிமன்ற பட்டியலிட உரிய காவல்துறை யை கொண்டு தக்க நடவடிக்கை எடுத்து எதிரி களுக்கு தண்டனை பெற்றுத் தந்து மேற்கண்ட சம்பவத்திற்கு நீதி வழங்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு வழங்கும் போது சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், ஜி.சுந்தர மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி. ஜோதிபாசு, வழக்கறிஞர்கள் கதாக.அரசு தாயுமானவன், ஐ.வி.என்.இன்குலாப் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.