திருவாரூர், டிச.25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்ட அலுவல கத்தில் வீரவெண்மணி தியாகி கள் 56 ஆவது நினைவு தின செங்கொடி எழுச்சியாக ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. வெண்மணி நினைவு தின செங்கொடியை கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.முருகை யன் ஏற்றினார். அலுவலக செயலா ளர் எம்.கலைமணி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா, மாவட்டக் குழு உறுப்பி னர் ஜி.பழனிவேல், நகரச் செய லாளர் எம்.டி.கேசவராஜ் உள்ளிட்ட பலர் வீரவணக்கம் செலுத்தினர். குடவாசல் குடவாசல் கட்சி அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் டி.லெனின் முன்னிலை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி செங்கொடி ஏற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.லெட்சுமி மற்றும் ஒன்றிய, நகர குழு உறுப்பினர்கள், வர்க்க வெகு ஜன அரங்கத்தினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குடவாசல் பேரூ ராட்சி 9 ஆவது வார்டு ஸ்டாலின் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் வெண்மணி தியா கிகள் கொடியை மாநிலக் குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி ஏற்றி வைத்து உரையாற்றினார். இதேபோல் மாவட்டம் முழு வதும் வீரவெண்மணி செங்கொடி எழுச்சியுடன் ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆமணக்கந்தோண்டி, புதுச்சா வடி, சின்னவளையம், முத்துச் சேர்வாமேடம், கீழக்குடியிருப்பு, ஜெயங்கொண்டம் கீழத்தெரு, அடிப்பள்ளதெரு, மகிமைபுரம், உட்கோட்டை, மீன்சுருட்டி புதுத் தெரு, சலுப்பை, வெத்தியார் வெட்டு உள்ளிட்ட கிளைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில் கட்சியின் செங்கொடி ஏற்றி வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. சிறப்பு பேரவை ஜெயங்கொண்டம் ஜூப்ளி சாலையில் உள்ள தனியார் கூட்ட ரங்கில் வெண்மணி தியாகிகள் நினைவு தின மாவட்ட சிறப்பு பேரவை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் எம். வெங்கடாசலம் தலைமை வகித் தார். சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் வெண்மணி தியாக வரலாற்றை நினைவு கூர்ந்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஏ.கந்தசாமி, பி.துரைசாமி, டி.அம்பிகா, வி.பரம சிவம், ஒன்றியச் செயலாளர்கள் அருண்பாண்டியன் (அரியலூர்), ஜெ.ராதாகிருஷ்ணன் (தா.பழூர்), எம்.வேல்முருகன் (ஆண்டி மடம்), வட்டச் செயலாளர் கு. அர்ச்சுனன் (செந்துறை), எஸ்.பி.சாமிதுரை (திருமானூர்), மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் குணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிபிஎம் கும்பகோணம் நகர் மதிய உணவு வழங்கல்
கும்பகோணம், டிச.25 - 1968 இல் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக, தீக்கிரையாகி உயிர் தியாகம் செய்த 44 கண்மணிகளின் நினைவு தினம் புதனன்று கடைப்பிடிக்கப்பட்டது. 7 ஆம் ஆண்டாக கீழ்வெண்மணி நினைவிடத்தில், கோணக்கரை விவேகானந்தா சேவா சமிதி மற்றும் சிபிஎம் கும்பகோணம் நகரம் சார்பில் வெண்மணிக்கு அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் மாநகரச் செயலாளர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் மற்றும் கும்பகோணம் மாநகர உணவுக் குழுவினர் உள்ளிட்ட தோழர்கள் ஈடுபட்டனர். மதிய உணவு வழங்கிய கும்பகோணம் மாநகர குழுவிற்கு, பொது மக்கள், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தனர்.