திருச்சிராப்பள்ளி, அக்.7- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த தோழர் சுந்தரவல்லி (80) வியாழனன்று காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மறைந்த தோழர் கே.வரதராசனின் சகோதரரும், கட்சியின் மூத்த தோழருமான கி.இலக்குவனின் மனைவி ஆவார். ஸ்ரீரங்கத்தில் உள்ள தோழர் இலக்குவன் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடந்த அன்னாரது இறுதி நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முகமதுஅலி மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு அன்னாரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் ஆகியோர் இலக்குவனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர்.