தூத்துக்குடி, ஜன. 7- குதிரைமொழி கிராமத்தில் உள்ள தேரி காட்டினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) கட்டுப்பாட்டில் உள்ள ஏரல் வட்டம் முக்காணி தடுப்பணையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், புன்னக்காயல் தடுப்பணையினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் குதிரை மொழி கிராமத்தில் உள்ள தேரி காட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, வனச்சரகர் அலுவலர் கவின், வனவர் நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.