திருச்சிராப்பள்ளி, ஜூலை 7 -
திருச்சி மணிகண்டம் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவி.வெற்றிச்செல்வன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாவட்டக் குழு உறுப்பினர் சங்கர், ஒன்றியச் செயலாளர் தங்கராஜ், பகுதிக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், குமார், அல்லித்துறை கிளை செயலாளர் தண்டபாணி ஆகியோர் 20 சந்தாக்களைப் பெற்றனர்.
தா.பேட்டை
தா.பேட்டை இடைக்கமிட்டி சார்பில் வெள்ளியன்று தீக்கதிர் சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தா.பேட்டை ஒன்றியச் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். தா.பேட்டை இடைக்கமிட்டி சார்பில் 17 ஆண்டு, 13 அரையாண்டு, 10 தினசரி என 40 தீக்கதிர் சந்தா வழங்கப்பட்டது.
தீக்கதிர் சந்தாவை புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மாவட்டக்குழு உறுப்பினர் சந்திரமோகன், மூத்த தோழர் சுப்பிரமணி ஆகியோர் சிபிஎம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரையிடம் வழங்கினர். இதில் கமிட்டி உறுப்பினர்கள், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டத்தின் 13 ஒன்றியங்களிலும் சந்தா சேர்ப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறந்தாங்கியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில், அறந்தாங்கி ஒன்றியம் ஒத்தக்கடையில் தினசரி மற்றும் 6 மாத சந்தா என 15 சந்தாக்கள் பெறப்பட்டன. வெள்ளியன்று அறந்தாங்கி நகரத்தில், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.தங்கராஜ், பேரின்பநாதன், இதழியாளர் சுகிர்தா கவிவர்மன் உள்ளிட்டோர் ஆண்டு சந்தா, அரையாண்டு சந்தாக்களை பெற்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் சாமி.நடராஜன், மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.