சட்டவிரோதமாக கோவில் கட்டும் பணி
செங்கல்பட்டு, ஜூலை 26- திருப்போரூர் வட்டம், மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவர் அதே கிராமத்தில் சர்வே எண் 16ல் ஓடை புறம்போக்கு நிலம் ஒரு ஏக்கர் 98 செண்டில் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். தொடர்ந்து நிலத்தில் விவசாயம் செய்து வருவதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் அந்த இடத்தில் பயிர் வைக்க கூடாது என தெரிவித்து அதற்கான அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் கோதண்டன் மற்றும் சிலர் அந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் தங்கியிருக்கும் கோதண்டன் மாமல்லபுரத்திற்கு வரும் வெளி நாட்டு நபர்களிடம் கோயில் கட்டுவதாக கூறி நன்கொடை வசூலித்து சட்டவிரோதமாக கோவில் கட்டும் பணியை செய்து வருகிறார். விவசாயம் செய்யக் கூடாது என தடுத்த அரசு நிர்வாகம் சட்டவிரோதமாக கோவில் கட்ட அனுமதித் திருப்பதாக கிராமத்து மக்கள் குற்றம் சாற்றியுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாயம் செய்துவந்த இடத்தில் சட்டவிரோதமாக கோவில் கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் மேலும் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கோவிந்த சாமி மாவட்ட ஆட்சியரி டம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.
தெருவோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
சென்னை, ஜூலை 26- பெருநகர சென்னை மாநகராட்சியில் நடப்பாண்டில் தெருவோர வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இணையதள இணைப்பு டன் கூடிய கைப்பேசி தரவு மூலம் தெருவோர வியாபாரி மற்றும் விற்பனை புகைப்படம், சுய விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேவையான இதர தகவல்கள் ஆகியவற்றை பெற்று பதிவு செய்யும் பணியை களப்பணி யாளர்கள் மேற்கொள்ளப்பட உள்ளனர். தற்பொழுது இப்பணி கோடம்பாக்கம், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நடைபெற்று வரு கிறது. இதனைத் தொடர்ந்து, அனைத்து மண்டலங்களிலும் இந்தக் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டை மற்றும் விற்பனை சான்றிதழ் இலவச மாக வழங்கப்படும். தெருவோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார நிதியி லிருந்து பல்வேறு மேம்பாட்டு வசதிகளை பெறவும், உணவு விற்பனை கடைகள் நடத்திட தமிழக உணவு பாதுகாப்பு துறையின் தரச் சான்றிதழ் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். என சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வண்டலூரில் பிடிபட்ட கஞ்சா
சென்னை, ஜூலை 26- சென்னை காரனோடை டோல் பிளாசா உடைத்துக் கொண்டு சென்ற காரில் 65கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற கார் வண்டலூர் நெடுஞ் சாலை அருகே கேட்பாரற்று கிடப்பதாக சோதனையிட்ட போது 65 கிலோ கஞ்சா இருப்பதை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து காரை ஓட்டிச் சென்ற நபர் களின் சிசிடிவி காட்சிகளை வைத்து, விசாரணை நடத்தி திருவனந்தபுரத்தை சேர்ந்த மூன்று இளைஞர்களை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா ஆந்திரப் பிரதேசத்தி லிருந்து, கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூட்டை உடைத்து நகை திருட்டு
மதுராந்தகம், ஜூலை 26 – மதுராந்தகம் அடுத்த படாளம் விஜய் நகர் பகு தியைச் சேர்ந்தவர் சுப்பிர மணி கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த வியா ழனன்று தனது குடும்பத்து டன் திண்டுக்கல் மாவட்டத் தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திங்க ளன்று இரவு வீடு திரும்பிய சுப்பிரமணி தனது வீட்டின் பூட்டை உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந் துள்ளார். வீட்டில் பீரோ கதவினை உடைத்து உள்ளி ருந்த சுமார் 3.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது, இதுகுறித்து சுப்பிரமணி காவல்துறை யினருக்கு தகவல் தெரி வித்த நிலையில் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணருடன் சென்று கைரேகை தடயங்களை சேகரித்து கொள்ளை யடித்துச் சென்ற மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.
லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
ஆலந்தூர், ஜூலை 26- சொந்தமான நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக உத்தண்டி கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெற்ற தாக கைது செய்யப்பட்டார். சென்னையை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்த வர் ராஜேஷ் (38). இவர் தனக்கு சொந்தமான நிலத் துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக உத்தண்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் (51) என்பவரை அணுகினார். அப்போது அவர் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று ராஜேஷி டம் கேட்டதாக கூறப்படுகி றது. ஆனால், லஞ்சம் கொடுக்க மறுப்பு தெரி வித்த அவர், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து ரசாயனம் தட விய பணத்தை ராஜேஷிடம் கொடுத்து அனுப்பியதுடன் லஞ்ச ஒழிப்பு துறை காவ லர்கள் மறைந்து இருந்து கண்காணித்தனர். இந்த நிலையில், பணத்தை ரமேஷ் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். லஞ்சம் வாங்கி யது தொடர்பாக ரமேசை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மூதாட்டியிடம் நூதன கொள்ளை
போரூர், ஜூலை 26- மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம்பகுதியை சேர்ந்தவர் பொத்தியம்மா (90) வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு திங்களன்று (ஜூலை 26) இளம்பெண் ஒருவர் உடல் வலிக்கு தைலம் தேய்த்து விடுவதாக கூறி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்க நகையை கழட்டி தேய்த்துள்ளார். பின்னர் தான் கொண்டு வந்தகவரிங் நகையை மூதாட்டியின் கழுத்தில் போட்டுவிட்டு அங்கிருந்து நகையுடன் இளம்பெண் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.