districts

சென்னை விரைவு செய்திகள்

வீட்டுப்பாடம்: சிறுமியை அடித்த ஆசிரியர் மீது புகார்
சென்னை, ஜூலை 2- வீட்டுப்பாடம் எழுதாத 4ஆம் வகுப்பு சிறுமியை சரமாரியாக அடித்து துன்புறுத்திய தனியார் பள்ளி ஆசிரியை மீது பெற்றோர் காவல் நிலை யத்தில் புகார் அளித்துள்ள னர். சென்னை: கொரட்டூர் ரயில் நிலையம் அருகே ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி சனிக் கிழமை (ஜூலை 2) வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றார். பள்ளியில் வகுப்பு ஆசிரியை மாணவர்களின் வீட்டுப்பாடத்தை சோதனை செய்துவந்தார்.அப்போது, அந்த மாணவி தமிழ்ப்பாடத்தில் வீட்டுப்பாடம் எழுதாத கார ணத்தால், வகுப்பறையில் வைத்திருந்த கம்பால், வலது கால் மற்றும் இடது கையில் கடுமையாக அடித்துள்ளார். இதனால் சிறுமிக்கு கை, காலில் ரத்தம் கட்டி வீக்கமடைந்தது.இந்நிலையில் ஒரு முதலுதவி சிகிச்சை கூட பள்ளியில் அளிக்கப்பட வில்லை. தொடர்ந்து மாலை பள்ளியில் இருந்து சிறு மியை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த தந்தையிடம், வகுப்பு ஆசிரியை தன்னை பயங்கரமாக அடித்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த தந்தை உடனடியாக இது குறித்து பள்ளி நிர்வா கத்திடம் கேட்டார். ஆனால், அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து ஆசிரியை பார்வதி மீது தந்தை, சத்யா கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட கொரட்டூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடமும் குழந்தையைத் தாக்கிய ஆசிரியையிடமும் விசாரணை நடத்தி வரு கிறார்.வீட்டுப்பாடம் முடிக்காத 4ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடுமை யாக தாக்கிய சம்பவம் பெற் றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையே பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.


கடலில் குளித்தபோது மணலில் சிக்கி மாணவர் பலி

சென்னை,ஜூலை 2- சென்னை மெரினா கடலில் குளித்துக் கொண்டி ருந்தபோது மணலில் சிக்கி  கல்லூரி மாணவர் உயிரி ழந்தார். சென்னை: மெரினா கடற்கரை நேதாஜி சிலை பின்புறம் சனிக்கிழமை அதி காலை 10 மாணவர்கள் கடலில் குளித்துக் கொண்டி ருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாணவர் கடல் அலையில் சிக்கி உயிருக்குப் போராடி னார். உடனடியாக அங்கு இருந்த மீனவர்கள் சிலர் கடலில் தத்தளித்த அந்த மாணவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்த போது, மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தார். இதையடுத்து ஆம்பு லன்ஸ் மூலமாக அந்த மாண வரை ராயப்பேட்டை அரசு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். இது குறித்து தகவலறிந்த மெரினா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தினர்.விசார ணையில் இறந்த நபர் குஜராத் மாநிலம்,  அகமதாபாத்தைச் சேர்ந்த  ஹரின் ெஜயின் என்பதும்; இவர் காட்டாங்கொளத் தூரில் உள்ள தனியார்  கல்லூரியில் மாணவர்களு டன் தங்கிப் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் சனிக்கிழமை அதிகாலை மாணவர்களு டன் சேர்ந்து மெரினாவில் குளிக்க வந்தபோது கடல்  மணலில் சிக்கி உயிரிழந்த தும் தெரியவந்தது.


லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

காஞ்சிபுரம், ஜூலை 2- திருபெரும்புதூர் அடுத்த மகாதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). இவர்  தனது தாத்தா பெயரில் உள்ள வீட்டு மனை மற்றும்  காலி மனை உள்ளிட்ட வற்றை தனது பெயரில் பத்திர பதிவு செய்தார். மகா தேவி மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் விடுப்பில்  இருந்ததால் குணகரம்பாக் கம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் கூடுதல் பொறுப்பாக மகா தேவி மங்கலம் கிராமத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தினேஷ் பட்டா பெயர் மாற்றம் செய்ய  கிராம நிர்வாக அலுவலராக  பணியாற்றி வந்த உதய குமாரிடம் மனு கொடுத் தார். பட்டா பெயர் மாற்றம்  செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்ச மாக கேட்டுள்ளார். பின்னர் ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து தினேஷ் குமார் காஞ்சிபுரம் லஞ்சம் ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். காஞ்சி புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரை யுடன் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை தினேஷ்  கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் வழங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு  காவல்துறையினர் கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.


கண்டெய்னர் லாரிகள் மோதல்

சென்னை, ஜூலை 2- பூந்தமல்லி அருகே 4 கண்டெய்னர் லாரிகள்  ஒன்றுடன் ஒன்று  மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.  சென்னை துறை முகத்திலிருந்து திருபெரும் பத்தூர் சென்ற கண்டெய்னர் லாரிகள் பாப்பான் சத்திரத் தில் மோதி விபத்துக்குள்ளா னது. இதன் காரணமாக சென்னை - பெங்களூர் தேசிய நெஞ்சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.