தஞ்சாவூர், ஜன.8 - கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை திறந்து மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாத்திடக் கோரி சிஐடியு தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் புதன்கிழமையன்று தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொள்ளிடம் ஆற்றில் முள்ளங்குடி, கொத்தங்குடி, நடுப் படுகை, மரூர், கோவிந்தநாட்டுச் சேரி, கோவிலடி, திருச்சென்னம் பூண்டி ஆகிய இடங்களில் மணல் குவாரியை திறந்திட நடப்பு சட்ட மன்ற கூட்டத் தொடரில் அறிவிக்க வலியுறுத்தி, சிஐடியு மணல் மாட்டு வண்டித் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், தஞ்சை நீர் வள ஆதாரத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் தலைமையில் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆதரித்துப் பேசினார். போராட்டத்தில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பி.என்.பேர் நீதி ஆழ்வார், கே.அன்பு, இ.டி.எஸ். மூர்த்தி, மாட்டு வண்டித் தொழிலா ளர்கள் சங்க நிர்வாகிகள் கோ விந்தராஜ், சுதாகர், கரிகாலன், ரமேஷ், செந்தில், கைலாசம், கார்த்தி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் கூறு கையில், “கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரி மூடப்பட்டதால் தொழிலாளர்கள் மாடுகளை வைத்து பராமரிக்க முடியா மலும், வேலை இழந்து, வருமானம் இன்றி குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் வீடு கட்டும் திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டம், அரசு கட்டடங்கள் கட்டும் பணி ஆகியவற்றிற்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மாநில அரசு நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே மாட்டு வண்டி தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் மணல் குவாரி திறக்க அனுமதியை வழங்க வேண்டும்” என்றார்.