districts

img

திருப்பூர் அருகே பிஏபி கால்வாயில் அடைப்பு விவசாய பாசனத்திற்கான தண்ணீர் விரயம்

திருப்பூர், பிப். 8 - திருப்பூர் அருகே பரம்பிக்குளம் ஆழி யாறு பாசனத் திட்டக் கால்வாயில் குப்பைக ளால் அடைப்பு ஏற்பட்டு, விவசாயப் பாச னத்திற்குத் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்து செல்ல வழியில்லாமல், அங்கிருந்து வெளியேறி அருகாமை நிலத்திலும், சாலை களிலும் பெருக்கெடுத்து ஓடி விரயமானது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத் தில் மூன்றாம் மண்டல பாசனத்திற்கு கடந்த  ஜனவரி 29 ஆம் தேதி திருமூர்த்தி அணையில்  இருந்து தண்ணீர் திறக்கப்பட் டது. வரும்  ஜூன் 13 ஆம் தேதி வரை 135 நாட்களுக்குள்  போதிய இடைவெளியில் சுமார் 10 ஆயிரத்து  300 மில்லியன் கன அடி தண்ணீர், ஐந்து சுற்று களாக விடப்படும். இதனால் உடுமலை, மடத் துக்கு ளம், திருப்பூர், பல்லடம், தாராபு ரம்,  காங்கேயம் மற்றும் கோவை மாவட்டத்தில் சூலூர்  உள்ளிட்ட பகுதிகளில் 94 ஆயிரத்து 362 ஏக்கர் விளைநிலங்களுக்குப் பாசன வசதி கிடைக்கும் என்று பொதுப் பணித் துறையினர் தெரிவித்திருந்தனர். மூன்றாம் மண்டலப் பாசனத்திற்கு தண் ணீர் திறக்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக் குப் பிறகு சனியன்று திருப்பூர் முத்தணம்பா ளையம் பகுதிக்கு கோவில்வழி கிளைக் கால் வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனினும் திருப்பூர் மாநகரத்தை ஒட்டி இருக் கக்கூடிய இந்த கால்வாயில் குப்பைகள் தேங் கியிருந்த நிலையில் மதகுப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தொடர்ந்து செல்ல வழியில்லாமல், பக்கத்தில் இருந்த நிலப்பகுதியிலும், சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நேரம் தண் ணீர் வெளியேறியதால் பக்கத்தில் இருந்த  நிலப்பகுதி பெரிய குளம் போல் காட்சியளித் தது. அத்துடன் சாலையில் பெருமளவு தண் ணீர் வீணாகியது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமாரிடம் கேட்டபோது, பிஏபி கால்வாயில் தண்ணீர் விடுவதற்கு முன்பு முழுமையாகத் தூர்வார  வேண்டும். குறிப்பாக திருப்பூர் தெற்குத் தாலு காவில் நகர்ப்புறம் சார்ந்த இந்த கால்வாய் இருக்கும் நிலையில், முறையாக பராமரித்தி ருக்க வேண்டும். தண்ணீர் விரயமாவதால் கடை மடை வரை தண்ணீர் சென்று சேராமல் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெ னவே விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்திலும்  பிஏபி கால்வாய்களில் வீட்டுக் கழிவுகளை கொட்டுவதால் முழுமையாகத் தூர்வாரி சுத் தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப் பட்டது. இங்குமட்டுமின்றி பொங்கலூர் ஒன்றி யத்துக்குட்பட்ட பல பகுதிகளிலும் இப்பி ரச்சனை இருப்பதால் பொங்கலூர் ஊராட்சி  ஒன்றிய ஆணையர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அரசு நிர்வாகம் உரிய முறையில் தலையிட்டு தூர் வாரி விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைப் பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். இது தொடர்பாக முத்தணம்பாளையம் பகிர்மானக் குழுத் தலைவர் கே.ஆர்.எஸ்.மணி கூறுகையில், தண்ணீர் விடுவதற்கு முன்பே பொதுப்பணித் துறையினர் கால் வாய்களைத் தூர்வாரினர். எனினும் கால் வாய் அகலமாக இருக்கும் நிலையில் முழு மையாக குப்பைகளை அகற்ற முடிய வில்லை. இக்கால்வாயில் தண்ணீர் திறக்கப் பட்டு வேகமாக தண்ணீர் வரும்போது, கால் வாயில் இருக்கும் கழிவுகள், குப்பைகள் மொத்தமாக அடித்து வரப்பட்டு, திரண்டு வரும். அவை மதகு பகுதியில் அடைப்புடன் சேர்ந்து தண்ணீர் தொடர்ந்து செல்ல முடி யாமல் இதுபோல் பாதிக்கப்படுகிறது. பொது மக்கள் வீடுகளில் உருவாகும் குப் பைகளை உள்ளாட்சிகள் மூலம் சேகரிக்கப்ப டுகிறது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் குப்பை சேகரிக்கப்படுகிறது. ஆனாலும் பொது மக்கள் அலட்சியமாக கால்வாய்களில் குப்பை கொட்டுவது தொடர்கிறது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற் பட வேண்டும். இந்த கால்வாயில் இருந்து அமராவதிபா ளையம், பெருந்தொழு, கண்டியன்கோயில் வரை சுமார் 300 ஏக்கர் பாசன வசதி பெறுகி றது. தண்ணீர் அடைப்பு ஏற்பட்டு விரயமானவு டன், கால்வாயின் மேல் பகுதியில் தண்ணீர்  அளவு குறைக்கப்பட்டு அடைப்பு நீக்கும் பணி  மேற்கொள்ளப்பட்டது. அடைப்பு சரி செய்த வுடன் வழக்கமான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு கடைமடை வரை போகும். இந்த  முறை ஐந்து பகுதிகளாகத் தண்ணீர் விடப்ப டும். எனினும் இந்த சுற்றுத் தண்ணீர் நிறுத்தப் பட்டால், மீண்டும் கால்வாய்களை மக்கள்  குப்பைத் தொட்டிகளாக மாற்றி விடுகின்ற னர். மக்கள் விழிப்புணர்வுடன் விவசாயப் பாச னத்திற்குத் தண்ணீர் விடும் கால்வாய்களில் குப்பை கொட்டாமல் தவிர்த்தால்தான் இப்பி ரச்சனைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கூறினார்.