கரூர், மார்ச் 9 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்த தான கழகம் சார்பில் அரசு மருத்துவ மனையில் வாலிபர் சங்கத்தினர், இளைஞர் கள், பெண்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருகின்றனர். அதனொரு பகுதியாக சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் நினைவு நாளில் இந்தியாவில் போதை கலாச்சாரத்திற்கு அடிமையாகும் இளைஞர்களை பாதுகாக்க வும், போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும் வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் நடைபெற்றது. முகாமிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சதீஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் வர வேற்றார். கரூர் காவல்துறை துணை கண்கா ணிப்பாளர் வி.செல்வராஜ் ரத்ததான முகாமை துவக்கி வைத்து பேசினார். வாலி பர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் செல்வராஜ், சிஐடியு கரூர் மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.சுப்பிரமணியன், எம்.தண்டபாணி, கே.சக்திவேல் ஆகியோர் ரத்ததான முகாமை வாழ்த்திப் பேசினர். இதில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். வாலிபர் சங்கத்தி னர் கலந்து கொண்டனர்.