districts

தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே 4 வழிச்சாலை பணி எப்போது முடியும்? நுகர்வோர் கேள்விக்கு நெடுஞ்சாலைத்துறை பதில்

கும்பகோணம், அக்.10 - விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டி - தஞ்சை இடையேயான 4  வழிச்சாலை பணிகள் வரும் 2023 டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் என  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய  நெடுஞ்சாலைத் துறை பதிலளித்துள் ளது. விக்கிரவாண்டியில் தொடங்கி கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் சேத்தியாத்தோப்பு, அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி, தஞ்சை மாவட் டம் சோழபுரம், கும்பகோணம், புன்னை  நல்லூர் வழியாக தஞ்சை வரையில்  சுமார் 220 கிலோமீட்டர் நீளமுள்ள 4 வழிச்சாலை புதிதாக அமைக்கப்படு கிறது. இச்சாலை மொத்தம் ரூ.3,517 கோடி மதிப்பில் செய்யப்பட்டு வரு கிறது. இதில் சாலை அகலப்படுத்து தல், சென்டர் மீடியன் அமைத்தல், விபத்துக்குரிய பகுதிகளை எச்சரித்தல், உயர்மட்ட மேம்பாலம், சர்வீஸ் சாலைகள், சிக்னல்கள், வாய்க்கால் மற்றும் ஆற்று பாலங்கள், ரயில்வே கிராசிங்குகள் போன்ற பணிகள் செய்யப்படுகின்றன. இதற்கான நில  ஆர்ஜிதம் செய்யப்பட்டு உரிய நஷ்டஈடு  வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு பணிகள் தொ டங்கப்பட்டு 4 ஆண்டுகள் முடிவடைந் துள்ளன.  ஆனால் இதுவரை 56 சத வீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் நல சங்கத் தலைவர் பாலாஜி, தேசிய நெடுஞ்சாலை துறைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பணிகள்  எப்போது முடிவடைந்து முழு பயன் பாட்டுக்கு வரும் என கேட்டிருந்தார். அதற்கு தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குநர் உதய்சங்கர் அளித்துள்ள பதிலில், “விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையே என்எச்.45சி சாலை  பணிகள் சுமார் 220 கி.மீட்டர் தூரம்  செய்யப்படுகிறது. நில ஆர்ஜீதம், கோயில்கள், குடிநீர் குழாய்கள் மற்றும்  மின் கம்பங்கள் மாற்றம், பொதுப் பணித்துறையில் தடையில்லா சான்று பெறுதல், பருவம் தவறிய மழை போன்ற பல காரணங்களால் குறிப்பிட்ட  காலத்திற்குள் பணிகளை செய்து முடிக்கவில்லை. விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு, சேத்தியாதோப்பு - சோழபுரம், சோழ புரம் - தஞ்சாவூர் ஆகிய மூன்று பிரிவு களாக பணிகள் செய்யப்படுகிறது. இதுவரை சராசரியாக 56 சதவீத  பணிகள் நடந்துள்ளன. அனைத்து பணி களும் வரும் 2023 டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு முழுப் பயன்பாட்டுக்கு  விடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள் ளது.