districts

திருச்சி முக்கிய செய்திகள்

தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ்  மானியத்துடன் வங்கிக் கடன்

தஞ்சாவூர், ஜன.8 -  முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பா ட்டிற்கான தொழில் முனைவுத் (CM-ARISE) திட்டத்தின் கீழ் திட்ட மதிப்புத்தொகையில் 35 விழுக்காடு அல்லது ரூ.3.50 லட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும்.  இத்திட்டத்தில் தவணைத்தொகையினை தவறாமல் திரும்பச் செலுத்தும் பயனா ளிகளுக்கு மேலும் 6 விழுக்காடு வட்டி  மானியம் வழங்கப்படும். புதிரை வண்ணார்  சமூகத்தினர் மேற்கண்ட திட்டத்தின்கீழ் தாட்கோ இணையதள முகவரியில் (https: //newscheme.tahdco.com) தொழில் முனைவோர்களாக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.  மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார். 

அதங்குடி முள்ளிபள்ளம் கிராமத்திற்கு  மயான வசதி செய்து தருக! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

நீடாமங்கலம்,ஜன.8- திருவாரூர் மாவட்டம், அதங்குடி முள்ளிபள்ளம் கிராம அருந்ததியர் மக்களுக்கு  நீண்ட காலமாக  மயான வசதி இல்லை.  இதுகுறித்து பல தடவை முறையிட்டும்  இப் பிரச்சனை தீர்க்கப்படாத அவலம் நீடித்து  வருகிறது.  இனியும் தாமதம் செய்யாமல்  மயானத்திற்கு  இடம் ஒதுக்கி  கட்டித் தர வேண்டும்.  மேலும் வாழாச்சேரி  பாலத்தில் இருந்து கிளியனூர் வரை  சாலை ஓரத்தில் 30.ஆண்டுகளாக  குடியிருக்கும் 150 குடும்பங்களுக்கு குடிமனைப்பட்டா இல்லை. இவர்களுக்கு இலவச குடிமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  நீடாமங்கலம் ஒன்றியம் வாழாச்சேரி கிளை மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.  

தமிழில் பெயர்ப்பலகை  விழிப்புணர்வு நிகழ்ச்சி

அறந்தாங்கி, ஜன.8-  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழில் பெயர்ப்பலகை வைப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.. தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தங்கராஜ் தலைமை உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவர் ரெ. தங்கதுரை  வாழ்த்துரை வழங்கினார் புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர்   சீதா லெட்சுமி விழிப்புணர்வு உரையாற்றினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில கூடுதல் செயலாளர் சம்பத்குமார்  சிறப்புரையாற்றினார்.  

மாற்றுத்திறனாளியிடம் நூதன முறையில் செல்போன் திருட்டு

தஞ்சாவூர், ஜன.8 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மாற்றுத்திற னாளியிடம் நூதனமுறையில் செல்போனை திருடிய நபர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி நிர்வாகத்தில், புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக காவலராக வேலை பார்ப்பவர் கணேசன் (50) விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்த மாற்றுத்திறனாளியான இவர், பேராவூரணி ஒன்றியம் இடையாத்தி கிராமத்தை சேர்ந்தவர். தினசரி பேருந்து மூலம் வேலைக்கு வந்து செல்கிறார்.  செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து இடையாத்தி கிராமம் செல்ல நேரடியாக பேருந்து வசதி இல்லாததால், பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் உள்ள சீதாம் பாள்புரம் சென்று அங்கிருந்து இடையாத்தி செல்லும் பேருந்திற்காக இரவு 8 மணியளவில் காத்திருந்தார்.  அப்போது  மோட்டார் சைக்கிளில் முகத்தில் மாஸ்க் அணிந்து வந்த நபர் ஒருவர்,  வாருங்கள் உங்களை ஊரில் விட்டுப் போகிறேன் என்று அவரை  வற்புறுத்தி அழைத்துள்ளார்.  சற்று தூரம் சென்றதும் வா.கொல்லைக்காடு டாஸ்மாக் கடை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தியவர், எனது சொல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகிவிட்டது. ஒரு போன் செய்யவேண்டும் உங்களது செல்போனை தாருங்கள் என்று கணேசனிடம் கேட்டுள்ளார். கணேசன் சமீபத்தில் புதிதாக வாங்கிய ஆன்ட்ராய்டு செல்போனை கொடுத்து, நீங்கள் பேசிக் கொண்டி ருங்கள். நான் மது வாங்கி வருகிறேன் என்று சென்றுள்ளார். அருகில் உள்ள கடைக்கு சென்று வாங்கிக்கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது செல்போனுடன் அந்த நபர் மாயமானது தெரியவந்தது.   இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் இது குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  

நெகிழி அரவைக்கூடம் திறப்பு  '
பாபநாசம். ஜன.8- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த ராஜகிரி ஊராட்சியில் ரூ.6.65 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை நுண்ணுயிர் உரக்கிடங்கு மற்றும் நெகிழி அரவைக்கூடம் திறப்பு  விழா நடைபெற்றது.   ராஜகிரி ஊராட்சித் தலைவர் சமீமா பர்வீன் தலைமை வகித்தார்.  பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் நாசர் உரக் கிடங்கினை திறந்து வைத்து, விவசாயிகளுக்கு திடக் கழிவு மேலாண்மை நுண்ணுயிர் உரத்தை வழங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் அஷ்ரப் அலி, ஒன்றியக் கவுன்சிலர் அனீஸ், ஊராட்சி செயலர் ஜெயக்குமார் உட்பட கிராம மக்கள் கலந்துக் கொண்டனர்.

ஆசிரியையிடம் தாலிச் செயினை பறித்த 2 பேர் கைது

பாபநாசம்,ஜன.8- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த  உத்தாணி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வனிதாமணி (வயது 50). இவர் பாபநாசத்திலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளி முடிந்ததும், இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பாலைத்துறை மெயின்ரோடு வழியாக சென்ற போது,  பின்னால் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், ஆசிரியர் வனிதாமணி கழுத்தில் இருந்த நான்கு பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இதனால் அதிர்ச்சியான  வனிதாமணி பாபநாசம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.  இதன் பேரில் பாபநாசம் காவல் துணைக் கண்கா ணிப்பாளர் முருகவேலு, ஆய்வாளர் சகாயஅன்பரசு, தனிப்படை உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடர்களை தேடி வந்தனர். இந் நிலையில் சிசிடிவி கேமரா காட்சி களை  ஆய்வு செய்ததில் மயிலாடுதுறையை சேர்ந்த ராம்கி (31) மற்றும் விக்னேஷ் (27) ஆகிய இருவரும் செயினை பறித்தது  தெரியவந்தது. இதன் பின்னர் இரு வரையும் கைது செய்து, நான்கு பவுன் தாலிச் செயினை பறிமுதல் செய்தனர்.  இருவரையும் பாப நாசம் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். நீதிபதி அப்துல் கனி இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தர விட்டார்.