அறந்தாங்கி, ஜன.25 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் அகற்றி விழிப்பு ணர்வு பேரணி மற்றும் மஞ்சள் பை அறி முகத்தை நகர்மன்ற தலைவர் இரா.ஆனந்த் துவக்கி வைத்தார். அறந்தாங்கி சுகாதார அலுவலர் (பொ) சுரேஷ்குமார் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர் மங்கையர்க்கரசி முன்னிலையில், குட்டைக்குளம் பகுதியில் ஒருமுறை மட்டுமே உபயோகிக்கும் நெகிழிக் கழிவுகள் பயன்படுத் துவதை தவிர்க்க வலியுறுத்தி உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து குட்டக்குளத்தைச் சுற்றி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் போது பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. குளத்தைச் சுற்றி தேங்கி யிருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் முனைவர் ரமேஷ் தலை மையில் என்எஸ்எஸ் மாணவ, மாணவிகள், வழக்கறிஞர் பாரதிராஜா தலைமையில் வளர்மதி நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் கார்னிவல் ஸ்கில் ட்ரைனிங் இன்ஸ்ட்டியூட் மாணவிகள், அறந்தாங்கி நகராட்சி சுகாதார பணி மேற்பார்வையாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் உள்பட 200-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.