districts

தொழிற்பயிற்சிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, செப்.6 - முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவித்திடும் பொருட்டு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக கைபேசி பழுது நீக்குதல், கார் மெக்கானிக், ஏ.சி.குளிர்சாதனப் பெட்டி பராமரிப்பு, எலக்ட்ரீசியன், பிளம்பிங், ஓட்டு நர் பயிற்சி, மின்சாரத்தால் இயங்கும் சீருந்து கள் பராமரித்தல் மற்றும் அதற்கான மின்சார பேட்டரி பராமரித்தல்-பழுதுபார்த்தல், மின்சா ரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்த்தல், பராமரித்தல் மற்றும் பேட்டரி சார்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பரா மரித்தல். தமிழ் மற்றும் ஆங்கிலத் தட்டச்சு,  கணினி தட்டச்சு பயிற்சி மற்றும் வன்பொ ருள் பழுதுபார்த்தல் தொழிற்பயிற்சிகள் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயிற்சிகளில்  கலந்து கொள்ள விருப்பம் உள்ள திருச்சி மாவட் டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும்  அவர் தம் சார்ந்தோர்கள் தங்களது விவ ரங்களுடன் செப்டம்பர் 13 ஆம் தேதிக்குள்  திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவல கத்தினை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கு மாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார்.