districts

சுகாதாரத் துறையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, டிச.21- திருச்சி மாவட்ட சுகாதா ரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் தேசிய சுகா தார குழுமத்தின் ஒப்பந்த அடிப்படையில் லேப் டெக்னீ சியன், துப்புரவு பணியாளர், துப்புரவு உதவியாளர், பாது காவலர், மருத்துவமனை பணியாளர், ஆடியோ மெட்ரி ஷியன், பேச்சு பயிற்சியாளர், ஆடியோலாஜிட், தரவு உள்  ளீட்டாளர், அலுவலக உதவி யாளர், பல்நோக்கு மருத்து வமனை பணியாளர், நுண் கதிர்வீச்சாளர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், பல்  மருத்துவர், நகர்புற சுகாதார  செவிலியர் ஆகிய பணியி டங்கள் நிரப்பப்பட உள்ளன.  இப்பணி முற்றிலும் தற்  காலிகமானது. (பணி காலம்  11 மாதம் மற்றும் 29 நாட்கள்) எக்காலத்திலும் பணி நிரந்த ரம் செய்யப்படாது. பணியில் சேர்வதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க  வேண்டும். விருப்பமுள்ள தகுதியான நபர்கள் விண் ணப்பங்களை டிச.26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் துணை இயக்குநர், சுகா தாரப் பணிகள் அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால்  முகமது கல்லூரி அருகில், டிவிஎஸ் டோல்கேட், திருச்சி -20 என்ற முகவரிக்கு நேரி லோ, விரைவு தபாலிலோ அனுப்பலாம். விண்ணப்ப படிவங்கள் மற்றும் பணிக்கான கல்வித் தகுதி வயது வரம்பு சம்பள விவரங்களை சுகாதாரத் துணை இயக்குநர் அலுவல கத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவ ரங்களுக்கு 0431-2333112, dphtry@nic.in என்ற மின் னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிர தீப் குமார் தெரிவித்துள்ளார்.