கும்பகோணம், டிச.12- கும்பகோணம் ரயில் நிலையத்தின் ஒரு பகுதியாக இயங்கி வந்த ஆர்.எம். எஸ்.அலுவலகம் தஞ்சை ஆர்.எம்.எஸ். அலுவலகத்துடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.இதனால் கும்ப கோணத்தில் இயங்கி வந்த அலுவலகம் மூடப்பட்டு. சேவை பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். கும்பகோணம் ரயில் நிலையத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அஞ்சல கத்துறையின் கீழ் ரயில்வே மெயில் சர்வீஸ் என்கிற ஆர்.எம்.எஸ். அலுவலகம் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தின் மூலம் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தபால் கள் மற்றும் பார்சல்களை அனுப்பி வந்தனர். ஒரு நாளைக்கு சராசரியாக 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தபால்கள் மற்றும் பார்சல்கள் அனுப்பப்பட்டும்,பெறப்பட்டும் வந்தன. மேலும் இங்கு ஆதார் சேவை யும் வழங்கப்பட்டது இந்த நிலையில் கும்பகோணத்தில் இயங்கி வந்த ஆர். எம்.எஸ். அலுவலகம் தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக ஒன்றிய அரசின் தவறான முடிவால் தற் போது தஞ்சை அலுவலகத்துடன் இணைக் கப்பட்டுள்ளது. அதன்படி கும்பகோணம் ஆர்.எம்.எஸ். அலுவலகத்தில் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு அலுவலக மும் மூடப்பட்டுள்ளது. எனவே ஆர்.எம்.எஸ். அலுவலகங்கள் இணைப்பை உடனடியாக ரத்து செய்து கும்பகோணத்தில் ஆர்.எம்.எஸ்.அலுவல கத்தை மீண்டும் இயங்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கும்பகோ ணம் ரயில் நிலையம் முன்பு அனைத்துக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாக் கோட்டை க. அன்பழகன் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், கும்ப கோணம் திமுக மாநகரச் செயலாளரும் மாநகர துணை மேயருமான சுப.தமிழ ழகன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் சா. விவேகானந்தன், சிபிஐஎம்எல் மாநகர செயலாளர் மதியழகன், திராவிட கழக மாவட்ட தலைவர் நிம்மதி, தமிழக வாழ்வு ரிமை கட்சி மாவட்ட செயலாளர் ம. செல்வம், சிஐடியு மாவட்ட தலைவர் ம. கண்ணன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், சிபிஎம் நகர செயலாளர் செந்தில்குமார், ஓய்வூதியர் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஆர்.ராஜகோபாலன் உள்ளிட்டோர் பேசினர்.