districts

கணவரால் கைவிடப்பட்டோர், விதவைகள், திருநங்கைகளுக்கு உடனடி குடும்ப அட்டை

மயிலாடுதுறை, மார்ச் 16-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கணவரால் கைவிடப் பட்டவர்கள், விதவைகள், திருநங்கைகள் ஆகியோருக்கு உடனடியாக குடும்ப அட்டை கள் வழங்கப்படும் என வட்ட வழங்கல் அலு வலர் அழைப்பு விடுத்து வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: கணவரால் கைவிடப்பட்டவர், விதவை கள், திருநங்கைகள், பழங்குடியினர் ஆகியோ ருக்கு உடனடியாக ரேசன் கார்டு வழங்கிட தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவரால் காணொளிக் காட்சி ஆய்வுக் கூட்டத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட  வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் மேற்காணும் நபர்களுக்கு உடனடியாக ரேசன் கார்டு வழங்கிட அனைத்து வட்ட வழங்கல் அலுவலரையும் அறிவுறுத்தி உள்ளார்.  அதன்படி தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள கணவரால் கைவிடப்பட்டவர்கள், வித வைகள், திருநங்கைகள், பழங்குடியினர் ஆகி யோர் ரேசன் கார்டு பெற ஏதுவாக தரங்கம் பாடி வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு  கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். விண்ணப்பம் செய்யும் அனைவரு டைய மனுக்களும் உரிய விசாரணை செய்து  உடனடியாக ரேசன் கார்டு வழங்கப்படும். நேரில் வர இயலாதவர்கள் வட்ட வழங்கல் அலுவலரை 9445000308, 8526626166 என்ற  தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள லாம் என வட்ட வழங்கல் அலுவலர் பாபு தெரி வித்துள்ளார்.