districts

img

குத்தாலம் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் மாணவர் சங்க மயிலாடுதுறை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

மயிலாடுதுறை, ஜூலை 30 - இந்திய மாணவர் சங்கத்தின் 28  ஆவது மயிலாடுதுறை மாவட்ட மாநாடு  சனிக்கிழமை தரங்கம்பாடியில் நடை பெற்றது.  சீகன்பால்கு ஆன்மீக மன்றத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு முன்னதாக, கடைவீதியிலிருந்து நீட் தேர்வுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, மயிலாடுதுறையில் மருத்து வக் கல்லூரி துவங்கிடக் கோரி முழக்கங் களை எழுப்பியவாறு ஏராளமான மாண வர்கள் பேரணியாக புறப்பட்டு தரங்கம் பாடி நுழைவு வாயில், இராஜவீதி வழி யாக மாநாடு நடைபெற்ற அரங்கிற்கு வந்தடைந்தனர்.  சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.மணிபாரதி சங்க கொடியினை ஏற்றி  வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பிரவீன் வரவேற்று பேசினார். அஞ்சலி தீர்மானத்தை சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கே.கலைச் செல்வன் வாசித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.தீபிகா,  மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி.தீபா, ஆர்.பிர காஷ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். ஏயூடி மாநில பொருளாளர் முனை வர் ஏ.சேவியர் செல்வக்குமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். ஸ்தாபன வேலையறிக்கையை மாவட் டச் செயலாளர் அமுல்காஸ்ட்ரோ வாசித் தார். மாநில துணைத்தலைவர் ப.மாரியப் பன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர். ரவீந்திரன், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் ஜி.வெண்ணிலா, வாலிபர் சங்க  மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன்  ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசி னர்.  சங்கத்தின் புதிய மாவட்டச் செய லாளராக அமுல்காஸ்ட்ரோ, மாவட்ட  தலைவராக மணிபாரதி, துணை தலை வர்களாக மார்டீன், தீபா, துணை செய லாளர்களாக பிரவின், தவசி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக பிர காஷ், தீபிகா, அபினேஷ் ஆகியோர் உள்ளடக்கிய 23 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிவித்து மாநிலத் தலைவர் ஏ.டீ.கண்ணன் நிறைவுரையாற்றினார். குத்தாலம் அரசு கலைக் கல்லூரிக்கு  புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மயிலாடு துறை மாவட்டத்தில் சட்டம் மற்றும் மருத்துவக் கல்லூரி, தொழிற்பயிற்சி கல்லூரிகளை அமைக்க வேண்டும். தியாகி தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதிய  கட்டிடம் கட்ட வேண்டும். மயிலாடு துறை மாவட்டத்தில் அதிகரித்து வரும்  கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்.  வாடகை கட்டிடத்திலேயே பல ஆண்டு களாக செயல்படும் தரங்கம்பாடி வட்ட  நூலகத்தை, பூட்டியே கிடக்கும் டேனிஷ் கவர்னர் மாளிகைக்கு மாற்ற  வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.