மயிலாடுதுறை, ஜூலை 12 நூறு நாள் வேலைத் திட்டத்தை சிதைக்கா மல் முழுமையாக செயல்படுத்திட வேண்டும். தேர்தலில் அளித்த வாக்குறுதி படி வேலை நாட்களை தமிழக அரசு 150 நாட்களாக அதிகரித்து, தினக்கூலியை ரூ.381 ஆக உயர்த்திட வழங்க வேண்டும். தாலிக்கு தங்கம் வழங்கும் திருமண உதவித் திட்டத்தை மீண்டும் தொடர வேண்டும். கட லோர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை உட னடியாக போக்க வேண்டும். வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையாக வேலை நாட்களை அளிக்க வேண்டும். காலை 7 மணிக்கு வேலை தளத்திற்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு கட்டுமான பணிகளுக்கு செலவு செய்து வேலை நாட்களை குறைக்கக் கூடாது. புதிய அட்டை வழங்குவதற்கு வீட்டு வரி, தண்ணீர் வரி கட்ட வேண்டும் என்று கட்டாயப் படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையில் சங்கத்தின் ஒன்றிய தலைவர் எம்.மணி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர். தரங்கம்பாடி, செம்பனார்கோயில் ஒன்றியங்கள் சார்பில் ஒன்றியத் தலைவர்கள் ஜி.கருணாநிதி, சாமித்துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் காபிரியேல், விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் டி.சிம்சன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
குத்தாலம்
குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்கம் சார்பில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கே.என்.ஸ்டாலின் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், ஒன்றிய செயலாளர் பி.பாஸ்கரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.செல்வநாதன், எஸ்.மஞ்சுளா, பி.ராமகுரு, எஸ்.கருணாநிதி, பி.சத்யா ஆகியோர் உரையாற்றினர்.